நோக்கியா 500 மற்றும் 603 மொபைல்கள்: ஒப்பீட்டு அலசல்

Posted By: Shajahan
நோக்கியா 500 மற்றும் 603 மொபைல்கள்: ஒப்பீட்டு அலசல்

தரமான படைப்புகளை பொருத்துத் தான் ஒரு நிறுவனத்தின் பெயர் சிறப்பு பெறுகிறது. அந்த வகையில் நோக்கியா என்ற பெயர் கொண்ட மொபைல்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் நம்பப்படுகிறது என்றால், சிறந்த படைப்புகள்தான் காரணம்.

நோக்கியாவின் 500 மற்றும் 603 ஆகிய இரண்டு மொபைல்களின் தொழில் நுட்ப வசதிகள் குறித்த விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். நோக்கியா-500 என்ற மொபைல் 3.2 இஞ்ச் தொடுதிரையுடன்,360 X 640 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கிறது.

டிஎப்டி கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டு இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரை வசதியை பொருத்த வரையில் நோக்கியா-603 மொபைல், நோக்கியா-500 மொபைலை மிஞ்சுகிறது. 603 மொபைல் மாடல் 3.5 ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.

நோக்கியா-500 மொபைல் 93 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ஆனால் நோக்கியா 603 மொபைல் கொஞ்சம் கூடுதலாக 109.6 எடையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களிலுமே நிறைய தொழில் நுட்பங்களை உள்ளக்கியதாக இருக்கிறது. நோக்கியாவின் 300 மற்றும் 603 என்ற ஸ்மார்ட் மொபைல்களும் ஒரே மாதிரியான கேமராவையும், துல்லியத்தையும் வழங்குகிறது.

இந்த மொபைல்கள் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2592 x 1944 பிக்ஸல் துல்லியத்தையும் கொடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இரண்டு மொபைல் போன்களுமே சிம்பையான் ஓஎஸ் கொண்டது தான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் நோக்கியா-500 மொபைல் சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலமாகவும், 603 மொபைல் சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலமாகவும் இயங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் 11 பிராசஸர் துணை புரிகிறது.

ஸ்மூதர் சேட்டிலைட் நேவிகேஷன் வசதிக்காக இதில் ஏ-ஜிபிஎஸ் தொழில் நுட்பம் இதில் வழங்கப்பட்டுள்ளது.

1110 எம்ஏஎச் ஸ்டேன்டர்டு லித்தியம் அயான் பேட்டரியினால் 7 டாக் டைம் மற்றும் 500 ஸ்டான்ட்-பை டைமையும் பெற முடியும்.

நோக்கியா-603 மொபைல் 16 மணி நேரம் டாக் டைமையும், 460 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.இந்த ஸ்மார்ட் மொபைல்கள் ஜிபிஆர்எஸ், எட்ஜ், புளூடூத், யூஎஸ்பி போர்ட் தொழில் நுட்பங்களையும் கொடுக்கிறது.

நோக்கியா-500 மொபைல் ரூ.10,000 விலையிலும், நோக்கியா 603 மொபைல் ரூ.15,000 விலையிலும் கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்