நோக்கியா 5 மற்றும் 6 : இந்திய விற்பனை தேதி வெளியீடு.!

|

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே உலகளவில் மிக வேகமான முறையில் சந்தைகளை எட்டியுள்ள நிலையில் இந்தியாவில் சியோமி, மோட்டோரோலா, லெனோவா, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை சந்திக்கிறது. அதனை மனதிற்கொண்டு இந்தியாவில் நோக்கியா 3 வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த வெளியீட்டில் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தயார்படுத்தி வருகிறது.

நோக்கியா 5 மற்றும் 6 : இந்திய விற்பனை தேதி வெளியீடு.!

நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 5 இறுதியாக ஆகஸ்ட் 15 தொடங்கி இந்தியாவில் கிடைக்கப்பெறும். இந்த கைபேசி ஆப்லைன் சில்லறை கடைகளில் ரூ.12,899/- என்ற விலைக்கு கிடைக்கும். இது லெனோவா கே8 நோட், ஜியோனி ஏ1 லைட் மற்றும் சியோமி ரெட்மீ நோட் போன்ற கருவிகளுக்கு போட்டியாக அமையுமென்று எதிர்பார்க்கலாம்.

விற்பனை

விற்பனை

நோக்கியா 5 ஆனது இந்த சுதந்திர தினம் முதல் விற்பனைக்கு வருகிறது. நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆனது ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் முன்னர் கூறியது போலவே கருவி இகல் இந்திய சந்தையை அடைகின்றன. மறுகையில், நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 23 முதல் அமேசான் இந்தியாவில் ஆன்லைனில் கிடைக்கும்.

பின்புற கேம்

பின்புற கேம்

நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே, அலுமினிய யூனிபாடி, எப்/2 துளை, இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேம் மற்றும் 84 டிகிரி பரப்பளவில் 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

நான்கு வண்ண விருப்பங்கள்

நான்கு வண்ண விருப்பங்கள்

மேலும் ஸ்னாப்ட்ராகன் 430 சிப்செட், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்பக்க சேமிப்பு ஆகியவற்றுடன் மைக்ரோ அட்டை மூலம் விரிவாக்கும் ஆதரவு, 3000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது. டெம்பர்டு ப்ளூ, வெள்ளி, மேட் பிளாக் மற்றும் செம்பு என்ற நான்கு வண்ண விருப்பங்கள் வெளி வருகிறது.

சிப்செட்

சிப்செட்

மறுகையில் நீங்கள் உயர் அம்சங்களை தேடுகிறீர்களானால், நோக்கியா 6 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.14,999/- ஸ்மார்ட்போன் ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே, பிடிஏஎப், 16எம்பி ரியர் கேம் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா, நோக்கியா 5 கொண்டுள்ள அதே சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரேம் மற்றும் சேமிப்பு கட்டமைப்பு

ரேம் மற்றும் சேமிப்பு கட்டமைப்பு

ஆனால் 3ஜிபி மற்றும் 32 ஜிபி என்ற அதிக ரேம் மற்றும் சேமிப்பு கட்டமைப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் ஆம்பிலிப்பியர் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களை தவிர இதர இரண்டு ஸ்மார்ட்போன்களும் அம்சங்களில் ஒரேபோல் தான் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 5 sales in India to commence on August 15; Nokia 6 to be available on August 23. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X