Home
Mobile

கனவில் கூட நினைக்காத விலைகுறைப்பில் நோக்கியா 5 & நோக்கியா 8.!

இந்தியாவில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் ரூ.13,499/- வெளியான நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட 3ஜிபி ரேம் மாறுபாடானது இனி ரூ.12,499.!

By Muthuraj

இந்தியாவில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் ரூ.13,499/- வெளியான நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட 3ஜிபி ரேம் மாறுபாடானது இனி ரூ.12,499/-க்கு வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள நோக்கியா 8 ஆனது கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.36,999/-க்கு அறிமுகமானது, இக்கருவி ஐஜி ரூ.28,999/-க்கு வாங்க கிடைக்கும். இந்த மறுபரிசீலனை செய்யப்பட்ட விலைகள் வருகிற வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடவடிக்கையானது நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2018 நிகழ்வின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது, அந்நிகழ்வில் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அடுத்தக்கட்ட புதிய நோக்கியா மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

நோக்கியா 5 அம்சங்கள்

நோக்கியா 5 அம்சங்கள்

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவுக்கு மேம்படுத்தப்படுகிறது. ஒரு 5.2 இன்ச் எச்டி (720x1280 பிக்ஸல்) ஐபிஎஸ் எல்சிடி பேனல் மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

மேலும் 3 ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு ஆக்டா-கோர் க்குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எப் 2.0 துளை, பிடிஏஎப் லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃபிளாஷ் உடனான 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எப் 2.0 துளை, 84-டிகிரி பீல்ட்-ஆப்-வியூ லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் செல்பீ கேமரா சென்சார் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் நோக்கியா 5 ஆனது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள் சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஓடிஜி உடன் மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

நோக்கியா 8 அம்சங்கள்

நோக்கியா 8 அம்சங்கள்

நிறுவனத்தின் பிளாக்ஷிப் சாதனமான நோக்கியா 8 ஸ்மார்ட்போனும் டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவுக்கு மேம்படுத்தப்படுகிறது. ஒரு 5.3 க்யூஎச்டி (1440x2560 பிக்ஸல்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 2.5டி கர்வ்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

மேலும் 4 ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு ஆக்டா-கோர் க்குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு 13எம்பி பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இரண்டு சென்சார்களுமே எப்/ 2.0 துளை, பிடிஏஎப், 76.9 டிகிரி அகலமான லென்ஸ் மற்றும் ஒரு இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் ஒரு ஐஆர் ரேங்கிஃபையர் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ப்ரீ-லோலட் 'போத்தீ'

ப்ரீ-லோலட் 'போத்தீ'

முன்பக்கத்தை பொறுத்தமட்டில் எப் 2.0 துளை, பிடிஏஎப், 78.4 டிகிரி அகலம் கோண லென்ஸ் கொண்ட 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் மூன்று கேமராக்களுமே கார்ல் ஜீஸ் ஒளியியல்களுடன் வருகின்றன. உடன் ப்ரீ-லோலட் 'போத்தீ' அம்சத்துடன் வருகிறது. இது ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமரா அமைப்புகளை பயன்படுத்தி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கைப்பற்ற அனுமதிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

3090எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் நோக்கியா 8 ஆனது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி5, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் விலைகுறைப்பு மற்றும் அறிமுகம் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 5, Nokia 8 Price in India Slashed. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X