Home
Mobile

அட்டகாசமான விலையில் நோக்கியா 5 கருவியின் 3ஜிபி ரேம் மாதிரி அறிமுகம்.!

நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அசல் 2 ஜிபி ரேம் மாதிரியானது ரூ.12.499/- என்ற விலைக்கு இந்தியாவில் வெளியிடப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இந்த வெளியீடு நிகழ்ந்துள்ளது.

By Muthuraj

மெல்ல மெல்ல இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை தன்வசம் ஈர்த்துக்கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்கலாமா என்று யோசிக்காத ஆளே இல்லை எனலாம். அதில் பட்ஜெட் விலைப்பிரிவில் களமிறங்கியுள்ள நோக்கியா 5 ஸ்மார்ட்போனை குறிப்பிட்டு கூறலாம்.

அட்டகாசமான விலையில் நோக்கியா 5 கருவியின் 3ஜிபி ரேம் மாதிரி அறிமுகம்.!

அந்த ஆர்வத்தை மென்மேலும் தூண்டும் வண்ணம் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் புதிய 3 ஜிபி ரேம் மாறுபாடு இந்தியாவில் அறிமுமாகும் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அசல் 2 ஜிபி ரேம் மாதிரியானது ரூ.12.499/- என்ற விலைக்கு இந்தியாவில் வெளியிடப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இந்த வெளியீடு நிகழ்ந்துள்ளது.

மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

நோக்கியா மொபைல் பிராண்டுக்கான உரிமத்தை வைத்திருக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம், மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2 கருவியை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது மற்றும் அக்கருவி இந்த நவம்பர் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5 (3ஜிபி ரேம் வேரியண்ட்) விலை

நோக்கியா 5 (3ஜிபி ரேம் வேரியண்ட்) விலை

நோக்கியா 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.13,499/- என்ற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு பிரத்யேகமாக வாங்க கிடைக்கும்.

ஜியோ கூட்டணியில் வாங்கினால்

ஜியோ கூட்டணியில் வாங்கினால்

ஜியோ மற்றும் நோக்கியா கூட்டணியில் வாங்கப்படும் நோக்கியா 5 மீது 5ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெற ரூ.309/- அல்லது அதற்கு மேலான ஜியோ ரீசார்ஜ்களை நிகழ்த்த வேண்டும். இந்த கூடுதல் டேட்டா வாய்ப்பை ஆகஸ்ட் 31, 2018 வரை மொத்தம் 10 ரீசார்ஜ்களுக்கு மட்டுமே என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14-ஆம் தேதி ஆப்லைன்

நவம்பர் 14-ஆம் தேதி ஆப்லைன்

இந்த பிரத்தியேக ஆன்லைன் விற்பனை காலத்திற்குப் பிறகு, நவம்பர் 14-ஆம் தேதி, நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆனது நாடு முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.

இரண்டு வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும்

இரண்டு வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும்

இந்த மாறுபாடு மேட் பிளாக் மற்றும் டெம்பிபெர்ட் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும். நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அசல் 2ஜிபி மாறுபாடானது காப்பர் மற்றும் வெள்ளி என்ற கூடுதல் வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

ரேம் தவிர, நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், அதன் அசல் 2ஜிபி மாறுபாட்டை போலவே தான் உள்ளது. இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வாக்குறுதியும் பெற்றுள்ளது.

5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.2 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 எஸ்ஓசி உடனான 3ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

நோக்கியா 5 ஆனது பிடிஏஎப், எப் / 2.0 துளை, மற்றும் டூயல் டோன் ஃப்ளாஷ்ஒ ஆகிய அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்கும். முன்பக்கம், ஓரு எப் / 2.0 துளை மற்றும் ஒரு 84 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான ஒரு 8 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் கேமரா உள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் இது வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, ஆர்டிஎஸ், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஓடிஜி உடன் மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

சென்சார்களை பொறுத்தமட்டில், ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ், கைரோஸ்க்கோப் மனற்றும் பிராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் அளவீட்டில் (கேமரா பம்ப் தவிர்த்து) 149.7x72.5x8.05 உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 5 Gets a New 3GB RAM Variant in India, Priced at Rs. 13,499. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X