நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் நோக்கியா 5.3 சாதனங்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால்
எச்எம்டி குளோபல் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யவில்லை.

மேலும் இந்த புதிய அப்டேட் புதிய அம்சங்களை கொண்டுவருவதுடன் பிழை திருத்தங்களையும் செய்கிறது. குறிப்பாக சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக முதலில் Nokiapoweruser வலைத்தளம் தான் தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் நோக்கியா 5.4 வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். மேலும்
இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் இது வெளிவந்தது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்
6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
குவாட்-கேமரா அமைப்பு
48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
பின்புற கைரேகை சென்சார்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
10W சார்ஜிங்
4,000 எம்ஏஎச் பேட்டரி
நிறம்: போலார் நைட் மற்றும் டஸ்க்

மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது புதிய நோக்கியா ஜி50 5ஜி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதாவது நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720 x 1560 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பிமெயின் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுடெப்த் கேமரா, அல்ட்ரா வைடு கேமரா ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். அதேபோல் இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4850 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications