நோக்கியா 5.4 பிப்ரவரி 10ல் அறிமுகமா..? என்ன விலையில் இந்த போனை எதிர்பார்க்கலாம்?

|

நோக்கியா நிறுவனம் இந்தியச் சந்தையில் புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை வரும் 10ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 5.4 வெளியாவதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் இந்த புதிய போனிற்கான விளம்பரம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

புதிய நோக்கியா 5.4

புதிய நோக்கியா 5.4

கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் வெளிவரும் என்ற செய்தியை நன்கு அறிந்த செய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தோம். அதேபோல், இந்த வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது இப்போது பிளிப்கார்ட் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 5.4 போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

இது பிப்ரவரி 10ல் அறிமுகமா?

இது பிப்ரவரி 10ல் அறிமுகமா?

இந்த பிப்ரவரி மாதத்தில் நோக்கியா 5.4 உடன் எச்.எம்.டி குளோபல் நிறுவனம் மேலும் சில சாதனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்திய மதிப்பின் படி இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் தோராயமாக சுமார் ரூ. 17,000 என்ற விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பாவில் 189 யூரோக்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

  • 6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
  • குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
  • குவாட்-கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
  • 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
  • வாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா?வாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா?

    பேட்டரி
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • பின்புற கைரேகை சென்சார்
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • 10W சார்ஜிங்
    • 4,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia 5.4 Listed On Flipkart Ahead Of India Launch On February 10 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X