Home
Mobile

யாரும் எதிர்பார்க்காத விலையில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமராவுடன் அறிமுகம்.!

நோக்கியா நிறுவனம் இன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலை செக்மென்ட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் நிறுவனம் புதிய நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் சாதனத்தையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள்

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள்

இந்த பதிவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்களைப் பார்க்கலாம். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது? இதன் இரண்டு வேரியண்ட் மாடல்கள் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது? ஆரம்பக்கால சலுகைகள் என்ன என்பது போன்ற அனைத்து தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

நோக்கியா 5.4 விலை

நோக்கியா 5.4 விலை

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் கொண்ட ஒரு மாடலாகவும், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.13,999 என்ற விலையிலும் மற்றும் ரூ.15,499 என்ற விலையிலும் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா வலைத்தளம் வழியாகப் பிப்ரவரி 17ம் தேதி முதல் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 4,000 வரை ஜியோ சலுகை

ரூ. 4,000 வரை ஜியோ சலுகை

நோக்கியா 5.4 வாடிக்கையாளர்களுக்கு ஜியோவில் இருந்து ரூ. 4,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். ரூ .349 திட்டத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது ரூ. 2,000 உடனடி கேஷ்பேக் மற்றும் ஜியோவின் கூட்டாளிகளிடமிருந்து ரூ. 2,000 மதிப்புள்ள வவுச்சர்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

நோக்கியா 5.4 சிறப்பம்சம்

  • 6.39' இன்ச் 1520 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
  • குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
  • குவாட்-கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
  • 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
  • நிறம்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • பின்புற கைரேகை சென்சார்
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • 10W சார்ஜிங்
    • 4,000 எம்ஏஎச் பேட்டரி
    • நிறம்: போலார் நைட் மற்றும் டஸ்க்

Best Mobiles in India

English summary
Nokia 5.4 launched in India at starting price of Rs 13,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X