Home
Mobile

நோக்கியா 5.4 வாங்க ரெடியா.. மொத்த ஸ்பெசிபிகேஷனும் இணையத்தில் வெளியானது..

நோக்கியா நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தனது நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கும் அதிக வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் முழு விபரமும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

நோக்கியா 5.4

நோக்கியா 5.4 சாதனத்தில் 6.39' இன்ச் எச்டி பிளஸ் IPS LCD டிஸ்பிளே உடன் 1520 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த தகவலின்படி நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியுடன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 10

இந்த புதிய ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் கேமரா விருப்பத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புடன் வெளியாகும்.

லென்ஸ்

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி லென்ஸ், 5 எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும். முன்பக்கத்தில் 16 எம்பி செலஃபீ கேமரா, எல்இடி பிளாஷ், AI தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 5.4 full specifications leaked online befor launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X