நான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்.!

|

இந்த ஆண்டு துவகத்தில் நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில் எச்டிஎம்ஐ குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிலையில் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் கடைசியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எச்டிஎம்ஐ குளோபல் நிறுவனம்.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்;த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

பதற வைக்கும் பேய் போட்டோ உருவானது இப்படித்தான்!பதற வைக்கும் பேய் போட்டோ உருவானது இப்படித்தான்!

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பை 802.11 ஏசி (2.4GH

இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.! என்னென்ன நன்மைகள்.!கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.! என்னென்ன நன்மைகள்.!

எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலு

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரூ.15,080-விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5.3 with 13Mega Pixel Camera Launching in India on August: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X