4 கேமராவோடு குறைந்த விலையில் விற்பனை: Nokia 5.3 இப்போதே வாங்கலாம்!

|

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களோடு இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்கள் அமேசான், நோக்கியா வெப்சைட் மூலம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் சிறந்த அம்சங்களோடு விற்பனைக்கு வரும் என்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா வசதி, சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் வெளிவந்தது.

இன்றுமுதல் விற்பனை

இன்றுமுதல் விற்பனை

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. மேலும் இதை அமேசான்.காம் மற்றும் நோக்கியா வெப்சைட் மூலம் வாங்கலாம். நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 450 nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதி

ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படுகிறது. இன்று விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனையாகும் என கூறப்படுகிறது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13 எம்பி பிரதான கேமரா

13 எம்பி பிரதான கேமரா

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி பிரைமரி லென்ஸ் +5 எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8 எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 5.3 Smartphone Sale Start in India at Today Via Amazon, Nokia Website

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X