Home
Mobile

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா வசதி, சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது. நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 1600 x 720 பிக்சல்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 450 nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5.3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

வைஃபை 802.11 ஏசி (2.4GHz +

இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ர்ட்போனில் 4000எம்ஏஎச்

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மெமரி வசதி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 5.3 Lunched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X