Home
Mobile

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.! முழுவிவரங்கள்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதியவகை நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை படஜெட் விலையில் அறிமுகம் செய்யும்
எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5.2

நோக்கியா 5.2

இந்நிலையில் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி இந்தஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.2

வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனுடன் நோக்கியா 8.2 5ஜி சாதனமும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

1080பிக்சல் திர்மானம்

1080பிக்சல் திர்மானம்

இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080பிக்சல்திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனைவிட சற்று வித்தயசமாக இருக்கும் இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்

செயற்கை நுண்ணறிவு வசதி

செயற்கை நுண்ணறிவு வசதி

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்டவடிவில் நான்கு கேமராக்கள் இடம்பெறும், பின்பு எல்இடி பிளாஸ் வசதி, செயற்கை நுண்ணறிவு வசதி மற்றும் முன்புறம் அட்டகாசமான செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

நோக்கியா 5.2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.2 பேட்டரி

நோக்கியா 5.2 பேட்டரி

குறிப்பாக நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வைஃபை, ஜபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் இந்த சாதனம் ரூ.12,800-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 5.2 Price and Live Images Leaked Online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X