நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
ஆண்ட்ராய்டு 10 ரோல் அவுட்டில் சேர நோக்கியா 5.1 பிளஸ் சமீபத்திய ஸ்மார்ட்போன் என்று எச்எம்டி குளோபல் இன்று அறிவித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 15 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் பெற்றுள்ளன.

இன்றைய நிலவரப்படி, நோக்கியா 5.1 பிளஸ், நோக்கியா 3.1 பிளஸ் , நோக்கியா 9 ப்யூர் வியூ , நோக்கியா 6.2 , நோக்கியா 8 சிரோக்கோ ,
நோக்கியா 8.1 , நோக்கியா 7.2 , நோக்கியா 7 பிளஸ் , நோக்கியா 6.1, நோக்கியா 7.1 ,நோக்கியா 6.1 பிளஸ் , நோக்கியா 4.2, நோக்கியா 2.2 ,
நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 2.3 அனைத்தும் ஆண்ட்ராய்டு 10 க்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும்19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது, தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்
பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக்,
4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications