நோக்கியா 5.1 பிளஸ்: துவக்க விற்பனை மற்றும் சலுகை.! இவ்வளவு கம்மி விலையிலா.!
நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 5.1 பிளஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இன் விற்பனையை இந்திய சந்தையில் முதல் முறையாக இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது
நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 5.1 பிளஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இன் விற்பனையை இந்திய சந்தையில் முதல் முறையாக இன்று மதியம் 12 மணி அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 5.86 இன்ச் எச்.டி பிளஸ் தொடுதிரையுடன் கூடிய ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் டிஸ்பிளேயுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 3 ஜிபி ரேம், இரட்டை டூயல் கேமரா அமைப்பு, ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 3,060 எம்.ஏ.எச் பேட்டரியுடன் இன்று தனது விற்பனையை பிளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

நோக்கிய 5.1 பிளஸ்
நோக்கிய 5.1 பிளஸ் ஆண்ட்ராய்டு ஒன் திட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன்னுக்கான சாப்ட்வேர் அப்டேட்கள் உடனுக்குடன் வழங்கப்படும். அத்துடன் நோக்கியா 5.1 பிளஸ் விரைவில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தின் அப்டேட் வழங்கப்படுமென்று உறுதி அளித்துள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட் போன்
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சியோமி ரெட்மி நோட் 5 , ரெட்மி ஒய்2, மோட்டோ ஜி 6 மற்றும் ஹானர் 9என் ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

சலுகை
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட் போன் இன் துவக்க விற்பனை சலுகையாக ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.1,800 உடனடி கேஷ்பேக் ஆப்பர் மற்றும் 240 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

நோக்கியா 5.1 பிளஸ் விபற்குறிப்பு:
- 5.86 இன்ச் எச்.டி பிளஸ் 720x1520 பிக்சல் கொண்ட 2.5டி கர்வுடு கிளாஸ் நாட்ச் டிஸ்பிளே
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 400ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு
- மீடியா டெக் ஹீலியோ பி60 ப்ராசஸர்
- 13 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் பின் பக்க டூயல் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட வைடு அங்கிள் செல்பி கேமரா
- பின் பக்க எல்.இ.டி பிளாஷ்
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- பிங்கர்ப்ரின்ட் சென்சார்
விலை: ரூ.10,999

துவக்க விற்பனை
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட் போன் கிளோஸ் பிளாக் மற்றும் கிளோஸ் மிட்நைட் ப்ளூ நிறத்தில் பிளிப்கார்ட் தளம் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் தளத்தில் இன்று மதியம் 12 முதல் தந்து விற்பனையைத் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications