ரூ.10,999 விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 5.1 பிளஸ்.!
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் நேற்று நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா விற்பனை தளங்களில் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாய்பை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் பி60 வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

சேமிப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications