இந்தியா: 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்-விலை மற்றும் அம்சங்கள்.!
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 24-ம் தேதி நோக்கியா 5.1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

மேலும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளத்தில் மதியம் 2மணிக்கு இந்த நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும், இருந்தபோதிலும் இக்கருவியின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது. குறிப்பாக நாட்ச் டிஸ்பிளே வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்ற அம்சங்களை இப்போது பார்ப்போம்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் பி60 வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

சேமிப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,199 முதல் ரூ.15000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications