5.86-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இக்கருவியின் விலைப் பற்றிய சரியான தகவல் வெளிவரவில்லை.
எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 6.1 பிளஸ் மற்றம் நோக்கிய 5.1 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த மென்பொருள்
தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பேஸ் அன்லாக் வசதி மற்றும் டூயல்-சிம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது, மேலும் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

சேமிப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை
இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இக்கருவியின் விலைப் பற்றிய சரியான தகவல்
வெளிவரவில்லை, எனினும் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications