நோக்கியா 5.1, நோக்கியா 3.1 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி நோக்கியா 3.1, நோக்கியா 5.1 மாடல்களுக்கு ரூ.1000 மற்றும் ரூ.1500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,355 மற்றும் 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதேபோன்று நோக்கியா 5.1, நோக்கியா 3.1 வடிவமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா 3.1 அம்சங்கள்:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 3.1 கேமரா:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் மற்றும் 2990எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்டபோன் வெளிவந்துள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 5.1:
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 5.1 கேமரா:
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது,பின்பு 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications