நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ எச்எம்டி குளோபல் இப்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பிழைத் திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. மேலும் டார்க் மோட் உட்பட பல்வேறு வசதிகள் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ல் கிடைக்கும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில்; 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் ஆக்டோர் கோர் மீடியாடெக் ஹீலியோ பி18 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது,தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த புதிய அப்டேட் ஆனது ஸ்மார்ட் பதில் விருப்பத்தையும் சேர்க்கிறது. இது தவிர, புதுப்பிப்பு தனியுரிமை மற்றும் இருப்பிடத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் அக்டோபர் 13-ம் தேதிகக்குள் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அனைத்து நோக்கியா 5.1 பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications