41 மெகாபிக்ஸல் கேமராவுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

Posted By: Karthikeyan
41 மெகாபிக்ஸல் கேமராவுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

நோக்கியாவின் சூப்பர் கேமார போன் இந்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பியூர்வியூ-808 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மொபைல் 41எம்பி கேமரா சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இது ஏற்கனவே ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கிறது.

நோக்கியாவின் என்8 அடுத்ததாக கருதப்படும் இந்த பியூர்வியூ ஸ்மார்ட்போன் சிம்பியன் பெல்லே இயங்குதளத்தில் இயங்குகிறது. அதுபோல் 640x360 பிக்சல் ரிசலூசனுடன் கூடிய 4 இன்ச் அமோலெட் கொரில்லா கண்ணாடி டிஸ்ப்ளே, சிங்கிள் கோர் 1.3 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512 எம்பி ரேம், 16 ஜிபி சேமிப்பு, யுஎஸ்பி, ப்ளூடுத் 3.0 ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

எச்எஸ்டிபிஎ 14.4 எம்பிபிஎஸ், எச்எஸ்யுபிஎ 5.76 எம்பிபிஎஸ், வைபை, டிஎல்என்எ, ஜிபிஎஸ், எ-ஜிபிஎஸ், ஸ்டீரியோ எப்எம் ரேடியோ மற்றும் என்எப்சி போன்ற அட்டகாசமான தொழில் நுட்பங்களை இந்த மொபைல் கொண்டிருக்கிறது.

அடுத்து வர இருக்கும் நோக்கியாவின் விண்டோஸ் போன் அடிப்படையில் அமைந்த லுமியா ஸ்மார்ட்போன்களில் பியூர்வியூ-808 இமேஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்த நோக்கியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

இந்த புதிய நோக்கியா பியூர்வியூ-808 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் விற்பனைத் தேதி போன்றவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot