Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்!

|

மொபைல் போன் சந்தை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் வெறித்தனமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து OEM-களும் சரியான நேரத்தில் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் பிரபலமடைந்து வருவதால், 4ஜி இயக்கப்பட்ட பியூச்சர் போன்களின் உருவாக்கம் படிப்படியாக அடங்கியுள்ளது. ஆனால், எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் இன்னும் பியூச்சர் போன்களை கைவிடவில்லை.

நோக்கியா TA-1028 பதிவு எண்

நோக்கியா TA-1028 பதிவு எண்

கடந்த ஆண்டு ஆகஸ்டில், நோக்கியா TA-1028 என்ற பதிவு எண் கொண்ட மாடலுக்கு நோக்கியா வைஃபை அலையன்ஸ் சான்றிதழ் பெற்றது. அதன் சான்றிதழ் பெற்ற நேரத்தில், சாதனத்தின் பெயர் அறியப்படவில்லை. ஏறக்குறைய அரை வருடம் கழித்து, லவ்நோக்கியா நோக்கியா 400 4 ஜி என்ற பெயரை சான்றிதழிலுடன் நோக்கியா வெளிவிட்டது. நோக்கியா 400 4ஜி பியூச்சர் போனின் அம்சம், நோக்கியா 800 டஃப் மற்றும் நோக்கியா 2720 ஃபிளிப் உடன் ஒத்ததாக இருந்தது.

2.4GHz வைஃபைக்கான ஆதரவு

2.4GHz வைஃபைக்கான ஆதரவு

சான்றிதழ் பட்டியலின் படி நோக்கியா 400 4ஜி பியூச்சர் போன, ஸ்மார்ட்போன் என வகைப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கான காரணம் இந்த போனில் 2.4GHz வைஃபைக்கான ஆதரவு அம்சம் உள்ளது என்பதை குறிக்கிறது. நோக்கியா 400 4 ஜி பியூச்சர் போன், நோக்கியாவின் 3310 விலையை விட மலிவான பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!

GAFP இயக்க முறை என்றால் என்ன?

GAFP இயக்க முறை என்றால் என்ன?

நோக்கியா அறிமுகம் செய்யவுள்ள இந்த நோக்கியா மொபைலில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதன் GAFP இயக்க முறை தான் என்று கூறலாம். GAFP இயக்க முறை என்பது பியூச்சர் போன் தொலைபேசிகளுக்கான Android OS இயங்கு முறை அம்சமாகும். நோக்கியா 400 ஆனது ஆண்ட்ராய்டின் டச்லெஸ் UI கொண்ட இயங்குதளத்துடன் எதிர்பார்க்கலாம்.

கூகுளுடன் நெருக்கமாக செயல்படும் நோக்கியா

கூகுளுடன் நெருக்கமாக செயல்படும் நோக்கியா

நோக்கியா மொபைல்ஸ், கூகுளுடன் நெருக்கமாகச் செயல்படுவதால், நோக்கியாவின் பியூச்சர் போன்களை விரைவில் ஆண்ட்ராய்டின் மாறுபட்ட புதிய இயங்குதளத்துடன் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்எம்டி குளோபல் நோக்கியா, நோக்கியா 8.2 5 ஜி, நோக்கியா 5.2, மற்றும் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்களை எம்.டபிள்யூ.சி 2020 இல் வெளியிடும் என்று ஊகிக்கப்படுகிறது.

உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

நோக்கியா 3310 விலையை விட மலிவான விலை நோக்கியா 400 4ஜி

நோக்கியா 3310 விலையை விட மலிவான விலை நோக்கியா 400 4ஜி

அதேபோல் நோக்கிவயின் இந்த ஸ்மார்ட்போனகளை தவிர, இந்த புதிய நோக்கியா 400 4ஜி பியூச்சர் போன்னையும் நோக்கியா நிறுவனம் எம்.டபிள்யூ.சி 2020 அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 4ஜி சேவையுடன் நோக்கியா 3310 விலையை விட மலிவான விலையில் இந்த பியூச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டால் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 400 4G Feature Phone Ready to Launch cheaper than Nokia 3310 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X