சர்ப்ரைஸ்: எம்டபுள்யூசி 2018-ல் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.?!
மெல்ல மெல்ல மீண்டுவரும் ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஆனது எம்டபுள்யூசி 2018 நிகழ்விற்கான உற்சாகமான அறிவிப்புகளை ஏற்கனவே உறுதிசெய்துள்ள நிலைப்பாட்டில்..
அடுத்த வாரம் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அதன் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளது நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம்.

மெல்ல மெல்ல மீண்டுவரும் ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஆனது எம்டபுள்யூசி 2018 நிகழ்விற்கான உற்சாகமான அறிவிப்புகளை ஏற்கனவே உறுதிசெய்துள்ள நிலைப்பாட்டில், நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 4 பற்றிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.

நோக்கியா 4
வெளியான தகவலின்படி நோக்கியா 3 ஸ்மார்ட்போனை நோக்கியா 4 ஸ்மார்ட்போன் மிஞ்சும் வண்ணம் இருக்கும் மற்றும் நோக்கியா 4 ஆனது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

மீடியா டெக் சிப்செட் உறுதி
முன்னர் வெளியான நோக்கியா 3 ஆனது சராசரி செயல்திறன் கொண்ட சிப்செட் கொண்டிருந்ததால் அக்கருவி மீது அதிருப்தி ஏற்பட்டது. அதன்விளைவாக நோக்கியா 4 ஆனதில் சிறப்பான மீடியா டெக் சிப்செட் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேமரா பயன்பாட்டின் ஏபிகே மூலம்
இந்த நேரத்தில் நோக்கியா 4 ஸ்மார்ட்போன் பற்றி பல விவரங்கள் கிடைக்கவில்லை இருந்தாலும் நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த வேலைகள் நடக்கிறது என்பது மட்டும் உறுதி. நோக்கியா 4 என்றவொரு கருவியின் இருப்பானது, நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் கேமரா பயன்பாட்டின் ஏபிகே மூலம் அறிய வந்தது. அவ்வண்ணமே நோக்கியா 1, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 9 ஆகியவற்றுடன் நோக்கியா 4 ஸ்மார்ட்போனும் உறுதி செய்யப்பட்டது.

முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும்
இதர மூன்று ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில், நோக்கியா 1 ஆனது நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ பாதிப்பு கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போனாக இருக்கும். நோக்கியா 7 பிளஸ் ஆனது முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருக்கும் மற்றும் நோக்கியா 9 இந்த ஆண்டு வெளியாகும் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

625 சிப்செட் அல்லது 450 சிப்செட்
மறுகையில் உள்ள நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் அப்டேட் பற்றி இப்போது வரை வார்த்தைகளை இல்லை. நோக்கியா 5 ஆனது ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்டு தற்போது சந்தையில் கிடைக்கிறது. நோக்கியா 6 (2018) பதிப்பானது ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் உடன் சென்றுள்ளதால் நோக்கியா 5 ஆனது ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் அல்லது 450 சிப்செட் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பை உறுதி செய்யவில்லை
எதுவாகினும், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது இன்னமும் நோக்கியா 4-ன் இருப்பை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் நிகழப்போகும் எம்டபுள்யூசி 2018 நிகழ்வில் நோக்கியாவின் 7 பிளஸ், நோக்கியா 1 மற்றும் நோக்கியா 9 ஆகிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications