இந்தியா: டூயல் ரியர் கேமராவுடன் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பல சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம், பின்பு ஆணட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவம் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமரா:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வண்ண விருப்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக ரூ.10,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications