Home
Mobile

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள வசதியுடன் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு கடந்த 2020-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ பெற்றது.

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்

தற்சமயம் வெளிவந்த தகவலின்படி நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. மேலும் வெளிவந்த தகவலின்படி
குறிப்பிட்ட சில நாடுகளில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

அதாவாது சமூகவலைத்தளத்தில் வெளிவந்த ஒரு தகவலின்படி, ஆர்மீனியா, பெலாரஸ், ​​பல்கேரியா, சிலி, கொலம்பியா, Czech Republic, இஸ்ரேல், கஜகஸ்தான், மங்கோலியா, போலந்து, ருமேனியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் நோக்கியா 4.2 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்காது கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இருக்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்

இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வண்ண விருப்பங்களுடன் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்

இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது அட்டகாசமான நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Nokia 4.2 Received Android 11 OS Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X