நோக்கியா 3310 விலை மாற்றத்துடன் இந்திய வெளியீடு அறிவிப்பு : ரெடியாக இருங்க.!
இந்திய வெளியீடு, வண்ண திரை, பிக்சல் அடர்த்தி, கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, கேமரா, ஸ்னேக் கேம், மல்டிகலர்டு மற்றும் பல.!
கடந்த பல மாதங்களாக கிட்டத்தட்ட நோக்கியா 3310 கருவி சார்ந்து நாம் பெற்ற அனைத்து வதந்திகளும் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் உண்மையாக மாறியது. கடந்த பொற்காலத்தில் நமது கைகளில் தவழ்ந்த கிளாஸிக் கருவியான நோக்கியா 3310 மீண்டும் நமது கைகளில் தவழும் வரத்தை நோக்கியா நிறுவனம் "நோக்கியா பக்தர்களுக்கு" வழங்கியது. ஆனால் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இப்போது எளிமையான வடிவமைப்பு கொண்ட அதே சமயம் அழிக்கமுடியாத ஷெல் கொண்ட நோக்கியா 3310 கருவியின் இந்திய வெளியீடு மற்றும் உலக வெளியீடு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.!

வண்ண திரை
டிஸ்ப்ளே தொழில்நுட்பம் என்று வரும்போது புதிய நோக்கியா 3310 ஆனது கிளாசிக் 3310 கருவியை விட பல மெயில் தூரம் அதிக பாய்ச்சலை வழங்குகிறது. அதாவது வண்ணத்திரை கொண்டுள்ளது. வழக்கற்றுபோன ஒற்றை நிற காட்சிகள் காலம் மாறி வண்ண திரை கொண்டு நோக்கியா 3310 வெளியாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

120 பிபிஐ பிக்சல் அடர்த்தி
இந்த புதிய நோக்கியா 3310 ஆனது 120 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 2.4 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் மூலம் 3310 டிஸ்ப்ளே ஆனது பெரிய புரட்சி என்றில்லாமல் ஒரு போதுமான அளவு கொண்ட டிஸ்ப்ளேவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ
அதுமட்டுமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், புதிய நோக்கியா 3310 கருவியின் துருவமுனைப்பட்ட (போலரைஸ்டு) மற்றும் கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, சூரிய ஒளியில் நல்ல வாசிப்பு திறனை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

கேமரா
இந்த புதிய நோக்கியா 3310 கருவி அதன் முன்னோடி போலல்லாமல் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, செல்பீ கேமரா கிடையாது.!

வெளிப்படை
இந்த கேமரா எளிய புகைப்படங்களை பதிவு செய்ய உதவும். எனவே உயர் தீர்மான புகைப்படங்களை இந்த கருவியின் மூலம் எதிர்பார்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது எச்எம்டி நிறுவனம். சமூக ஊடக ஆர்வலர்கள் சேர்த்து நமக்கும் இந்த புதிய போனில் செல்ஃபிகளுக்கான முன் கேமரா இல்லை என்பதில் பெரிய வருத்தம் மற்றும் ஏமாற்றம் தான்.!

ஸ்னேக் கேம்
ஸ்னேக் கேம் - ஞாபகம் இருக்கிறதா.??? - அந்தக்காலத்து போதையான வீடியோ கேம் ஆன நோக்கியா 3310 பிரபல ஸ்னேக் கேம் ஆனது அப்டேட் செய்யப்பட்டு இந்த புதிய நோக்கியா 3310 கருவியிலும் இடம் பெற்று நம்மை மீண்டும் அடிமைபப்டுத்த வருகிறது.

மல்டிகலர்டு
அதே எளிய நான்கு பொத்தான் கேம் ஆன ஸ்னேக் இந்த புதிய பதிப்பில் அதற்கே உரிய எளிய 2டி கேம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால் பழைய ஒரு ஒரே வண்ணமுடைய தோற்றத்திற்கு பதிலாக ஒரு மல்டிகலர்டு கலை பாணியில் வெளியாகியுள்ளது.

கொடூரமான பேட்டரி லைஃப்
எல்லாவற்றிக்கும் மேலாக நவீன கால ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் வண்ணம் புதிய நோக்கியா 3310 ஒரு "கொடூரமான பேட்டரி லைஃப்" கொண்டுள்ளது. பழைய கருவியை விட 10 மடங்கு அதிகமான பேட்டரி திறன் கொண்டு இக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தளத்தில் இக்கருவி ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணி நேர பேச்சு நேரம் வழங்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.!

இந்திய வெளியீடு
சிவப்பு, மஞ்சள், நேவி ப்ளூ மற்றும் இன்னும் சில நிறங்களில்வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி ஒன்லிமொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் கீழ் இந்தியாவில் மே 5-ஆம் தேதி நோக்கியா 3310 (2017) முன் பதிவுக்கு திறக்கப்படும் மற்றும் மே 17 முதல் டெலிவரியானது தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

விலை
அது மட்டுமின்றி முன்பு இந்த வெளியான இந்திய விலை நிர்ணயம் ஆனதும் மாற்றப்பட்டுள்ளது, அதாவது முதலில் ரூ.3,400/- என்ற விலை நிர்ணயம் பெற்றது ஆனால் ஒன்லிமொபைல்ஸ் அறிவிப்பில் ரூ.3899/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க
அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்.!


Click it and Unblock the Notifications