அறிமுகம்: 4ஜி வோல்ட், வைஃபை, யன்ஓஎஸ் உடன் அசத்தலான நோக்கியா 3310.!

2017 ஆம் ஆண்டு பதிப்புடன் ஒப்பிடும் போது தற்போது வெளியாகியுள்ள ​நோக்கியா 3310 4ஜி ஆனது சற்று உயரமாக மற்றும் தடிமனாக உள்ளது.

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது சீனாவில் அதன் நோக்கியா 3310 4ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அறிமுகம்: 4ஜி வோல்ட், வைஃபை, யன்ஓஎஸ் உடன் அசத்தலான நோக்கியா 3310.!

தோற்றத்தின் அடிப்படையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 3310 4ஜி ஆனது அசல் நோக்கியா 3310 (2017) உடன் ஒத்திருக்கிறது. நோக்கியா 3310 (2017) பதிப்பானது கடந்த ஆண்டு பிப்ரவரியில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) தொழில்நுட்ப கண்காட்சியில் வெளியானது.

அறிமுகம்: 4ஜி வோல்ட், வைஃபை, யன்ஓஎஸ் உடன் அசத்தலான நோக்கியா 3310.!

இது 117 x 52.4 x 13.35 மிமீ மற்றும் 88.1 கிராம் அளவிலான எடை கொண்ட ஒரு பீச்சர் சாதனமாகும். 2017 ஆம் ஆண்டு பதிப்புடன் ஒப்பிடும் போது தற்போது வெளியாகியுள்ள ​நோக்கியா 3310 4ஜி ஆனது சற்று உயரமாக மற்றும் தடிமனாக உள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

பிரெஷ் ப்ளூ மற்றும் டார்க் பிளாக் போன்ற வண்ண மாறுபாடுகளில் வெளியாகியுள்ள இக்கருவியானது நோக்கியா 3310 (2017) போன்று எதிர்காலத்தில் மேலும் பல வண்ண விருப்பங்களில் வெளியாகலாம். ஒற்றை மைக்ரோ - சிம் கார்டு ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 3310 4ஜி ஆனது 320 x 240 பிக்சல்கள் தீர்மானத்தை ஆதரிக்கும் 2.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இரண்டு உள் சேமிப்பு விருப்பம்

இரண்டு உள் சேமிப்பு விருப்பம்

நேரடியான சூரிய ஒளியில் கூட தெளிவான திரை உள்ளடக்கங்களை பார்வையிட பயனர்களை அனுமதிக்கும் நோக்கியா 3310 4ஜி ஆனது 256எம்பி மற்றும் 512எம்பி என்கிற இரண்டு உள் சேமிப்பு விருப்பங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒரு மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றையும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

புகைப்படத்துறையை பொறுத்தமட்டில், பின்புல பலகத்தில் ஒரு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ப்ளூடூத் 4.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 3310 4ஜி ஆனது அதன் 4ஜி வோல்ட் பயன்பாட்டில் சுமார் 5 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 12 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமொரு 1200எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. யன்ஓஎஸ் (YunOS) கொண்டு இந்த கைபேசியானது வைஃபை உடன் சேர்த்து வைஃபை ஹாட்ஸ்பாட் போன்ற சில மேம்பட்ட அம்சங்களையும் வழங்குகிறது.

உத்தியோகபூர்வ நோக்கியா மொபைல் இணைய தளம்

உத்தியோகபூர்வ நோக்கியா மொபைல் இணைய தளம்

இந்த நோக்கியா 3310 4ஜி ஆனது தற்போது வரையிலாக உத்தியோகபூர்வ நோக்கியா மொபைல் இணைய தளத்தில் (சீன பதிப்பில்) பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்நாட்டு நாட்டில் உள்ள சீன மொபைல் கடைகளில் இக்கருவி விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பதிப்பு

உலகளாவிய பதிப்பு

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3310 4ஜி சாதனத்தின் உலகளாவிய பதிப்பானது நிகழவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 தொழில்நுட்ப கண்காட்சியில் அறிவிக்கப்படலாம். இக்கருவி சார்நடக மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 3310 4G Officially Unveiled with Yun OS, 4G VoLTE, Wi-Fi Capabilities. Read more about this Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X