4ஜி அம்சம் கொண்ட நோக்கியா 3310-ன் முழு அம்சங்களும் வெளியானது.!
இப்போது அதே சாதனத்தின் 4ஜி மாறுபாடு சார்ந்த பணிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
நோக்கியா பிரியர்களே.. தொடர்ச்சியான முறையில் வெளியான நோக்கியா ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்கி உங்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி விட்டீர்களா.? இருப்பினும் "விட்டக்குறை தொட்டக்குறை"0 போன்றதொரு உணர்வு உங்களிடம் இருக்கிறதா.? ஆம் என்றால் நீங்களொரு 3310 என்கிற கிளாசிக் மொபைலை இன்னும் வாங்கவில்லை என்று அர்த்தம்.

3ஜி மொபைலை வாங்கி என்ன செய்ய.? என்பது தான் உங்களின் பிரதான கேள்வியென்றால் கவலையை விடுங்கள். நோக்கியாவின் கிளாசிக் கருவியான 3310 மொபைலின் 3ஜி (2017) பதிப்பை தொடர்ந்து மேலுமொரு புதிய பதிப்பு விரைவில் வெளியாகும் என்பதை, தொடர்ச்சியாக வெளியாகும் பல அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

2ஜி நெட்வொர்க்குகளில் மட்டுமே தொடங்கப்பட்ட நோக்கியா 3310
ஆரம்பத்தில் 2ஜி நெட்வொர்க்குகளில் மட்டுமே தொடங்கப்பட்ட நோக்கியா 3310 ஆனது நோக்கியா கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மூலமாக கடந்த ஆண்டு நோக்கியா 3310-ன் 3ஜி இணைப்பு ஆதரவு கொண்ட சாதனம் அறிமுகமானது.

புதிய கிளாசிக் நோக்கியா 3310 (4ஜி) மொபைல்
இப்போது அதே சாதனத்தின் 4ஜி மாறுபாடு சார்ந்த பணிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து புதிய கிளாசிக் நோக்கியா 3310 (4ஜி) மொபைல் ஆனது சமீபத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சீன ஒழுங்குமுறை அமைப்பான டிஇஎன்ஏஏ (TENAA) தளத்தில் காணப்பட்டுள்ளது.

பல்வேறு எல்டிஇ பேண்ட்
இதற்கு முன்னர் வெளியான சில தகவலில் நோக்கியா 3310 (4ஜி) ஆனது மாடல் எண் டிஏ-1077 என்ற பெயரின் கேள் பல்வேறு எல்டிஇ பேண்ட்களை - பேண்ட் 38, பேண்ட் 39, பேண்ட் 40, மற்றும் பேண்ட் 41, ஜிஎஸ்எம், டிடி-எஸ்சிடிஎம்ஏ மற்றும் டிடி-எல்டிஇ - ஆதரிக்குமென அறியப்பட்டது.

256எம்பி ரேம் மற்றும் 512எம்பி உள்ளடக்க நினைவகம்
சமீபத்தில் வெளியான தகவலானது நோக்கியா 3310 (4ஜி) ஆனது 1.5ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசஸர் மூலம் இயங்கும் மற்றும் 256எம்பி ரேம் மற்றும் 512எம்பி அளவிலான உள்ளடக்க நினைவகம் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கம் வழங்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றும் இடம்பெறும் இக்கருவியின் வடிவமைப்பை பொறுத்தமட்டில், அசல் நோக்கியா 3310 மாதிரியின் அதே வடிவமைப்பில் தான் வெளியாகும்.

2.4 அங்குல டிஎப்டி மற்றும் டச் இல்லாத டிஸ்பிளே
இக 4ஜி மாடல் ஆனது 3ஜி மாடலின் அதே திரைவிகிதத்தை, அதாவது ஒரு 240 x 320 பிக்சல் தீர்மானம் கொண்ட 2.4 அங்குல டிஎப்டி மற்றும் டச் இல்லாத டிஸ்பிளே கொண்டிருக்கும். உடன் ஒரு 2எம்பி பின்புற சென்சார் மற்றும் ஒரு 1200எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டு மீண்டுமொரு நிலையான நோக்கியா 3310 கருவியாக களமிறங்கும்.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இந்த புதிய பட்டியலில் இயங்குதளத்தில் (ஓஎஸ்) மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய நோக்கியா 3310 4ஜி சாதனமானது யுன்ஓஎஸ் 5.2.0 கொண்டு இயங்குகிறது, இது அலிபாபா (சீன நிறுவனம்) உருவாக்கிய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.

வாட்ஸ்ஆப் போன்ற சில பயன்பாடு
யுன்ஓஎஸ் (YunOS) ஆனது, வாட்ஸ்ஆப் போன்ற சில ஸ்ட்ரிப்ட்டு டவுன் ஆண்ட்ராய்டு-சார்ந்த பயன்பாடுகளை இயக்கும் திறன் கொண்டது. ஆக எச்எம்டி நிறுவனமானது யுன்ஓஎஸ்-ன் மேம்பட்ட பதிப்பை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள பதிப்பைப் பயன்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 19-ல் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நோக்கியா 3310 4ஜி சாதனத்தின் அறிமுகம் அல்லது வெளியீடு சார்ந்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் இதுவரை இல்லை. சீனாவில் வருகிற ஜனவரி 19-ல் நடைபெறும் நிகழ்வொன்றில் நோக்கியா 9, நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 6 (2018) ஆகியவற்றுடன் இணைந்து இக்கருவி வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications