3ஜி வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் நோக்கியா 3310 3ஜி (விலை, அம்சங்கள்).!

|

நோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் மாடலான நோக்கியா 3310 (2017) சாதனத்தின் 3ஜி என்கிற ஒரு புதிய மாறுபாட்டை பெறுகிறது. 3ஜி இன்டர்நெட் ஆதரவு கொண்ட இந்த புதிய நோக்கியா 3310 ஆனது, 2ஜி வேகத்தில் மட்டும் மொபைல் தரவை அணுகும் ஆதரவு கொண்டு இந்த ஆண்டு முன்னதாக வெளியிடப்பட்ட மாடலில் இருந்து மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக காட்சியளிக்கிறது.

3ஜி வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் நோக்கியா  3310 3ஜி (விலை, அம்சங்கள்)

இந்த புதிய எச்எம்டி க்ளோபல் தொலைபேசியானது இப்போதைக்கு ஆஸ்திரேலிய சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவி இதர சந்தைகளுக்கும் விரைவில் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகான்ஸ் மற்றும் தீம்ஸ்

ஜகான்ஸ் மற்றும் தீம்ஸ்

3ஜி இணைப்பு தவிர, இந்த புதிய நோக்கியா 3310 3ஜி போன் ஆனது ஜகான்ஸ் மற்றும் தீம்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய தனிப்பயனாக்க விருப்பங்களுடன் வருகிறது. இந்த புதிய அம்சத்தை ரெட்ரோ யூஐ என நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்

மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்

மேலும் புதிய நோக்கியா 3310, அதன் அசல் உடன்பிறப்பு போலவே ஒரு மாதத்திற்கு நீடிக்கும் ஒரு பெரிய ஸ்டாண்ட்பை நேரம் கொண்டுள்ளது மற்றும் வழக்கமான மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் பின் சார்ஜரை கொண்டுள்ளது.

ப்ளூடூத் 2.1

ப்ளூடூத் 2.1

ஸ்பீக்கர்கள் மற்றும் பிற தொலைபேசிகளுடன் இணைக்க உதவும் ப்ளூடூத் 2.1 அம்சம் கொண்ட இந்த தொலைபேசி புதிய வண்ண திரை மற்றும் கிளாசிக் ஸ்னேக் கேமும் தன்னுள் கொண்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஒரு 2.4-அங்குல க்யூவிஜிஏ (240x320 பிக்சல்கள்) வண்ண டிஸ்பிளே கொண்டுள்ள இக்கருவி நிறுவனத்தின் வலைதள அறிக்கையின்படி ஜாவா மூலம் இயக்கப்படும் மற்றும் 64எம்பி சேமிப்பு கொண்டிருக்கும்.

மெமரி

மெமரி

மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக, 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

எப்எம் ரேடியோ கொண்டுள்ள நோக்கியா 3310 3ஜி, ஒரு அகற்றக்கூடிய 1200எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் இரட்டை-சிம் மாறுபாடு 24 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

நிறங்கள்

நிறங்கள்

அஸூர், சார்கோல், வார்ம் ரெட் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் இக்கருவி அளவீட்டில் 117x52.4x13.3மிமீ கொண்டுள்ளது மற்றும் இதன் இரட்டை சிம் பதிப்பு தோராயமாக 88 கிராம் எடையுடையது.

விலை

விலை

ஆஸ்திரேலியா சந்தையின்படி இந்த புதிய நோக்கியா 3310 3ஜி சாதனத்தின் விலை நிர்ணயமானது சுமார் ரூ.4,600/- இருக்கலாம். அதே நேரத்தில் இதன் "உலகளாவிய சராசரி விலை" ரூ.5,320/- ஆக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 3310 3G Variant Launched; Price, Release Date Revealed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X