புதிய நோக்கியா 3310(2017) -ஏன் வாங்க கூடாது? ஏன் வாங்க வேண்டும்?

By Prakash
|

இந்தியாவில் அதிகமக்கள் உபயோகப்படுத்தக்கூடிய மொபைல்போன் அது நோக்கியா மட்டும் தான், சர்வதேச மொபைல் சந்தையில் புதிய மொபைல்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

தற்போது வந்திருக்கும் புதிய நோக்கியா 3310 மாடல் வெறும் 79.6 கிராம் மட்டுமே உள்ளது, இவை இயக்குவதற்க்கு மிக எளிமையாக இருக்கும் தன்மைக் கொண்டவை, பல்வேறு மக்களுக்கும் பிடிக்கும் வண்ணம் உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 1.5அங்குல டிஸ்பிளே. (84-48) வீடியோ பிக்சல் கொண்டவை, இதன் டிஸ்பிளே மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா :

கேமரா :

இதன் கேமரா பொருத்தமாட்டில் எல்இடிஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது.பின்புற கேமரா 2 மெகா பிக்சல் கொண்டவை.

விறப்பனை:

விறப்பனை:

நோக்கியா 3310 இந்தியாவில் மே 18 ல் இருந்து விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொபைல் சந்தையில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிசைன்:

டிசைன்:

முந்தைய தலைமுறை மாடலை போல அல்லாமல் நவீன தலைமுறைக்கு ஏற்ற புத்தம் புதிய ரவுன்ட் எட்ஜ் கொண்ட டிசைனுடன் அற்புதமாக வந்துள்ள மாடலில் முந்தைய மாடலை போன்ற பட்டன்கள் பெற்று நேர்த்தியாக அமைந்துள்ளது.

விளையாட்டு அம்சங்கள்:

விளையாட்டு அம்சங்கள்:

இவற்றில் புதியதாக ஒரு விளையாட்டும் சேர்க்கப்படவில்லை,ஆனாலும் உலக புகழ்பெற்ற ஸ்னேக் கேம் மீண்டும் வண்ண திரையுடன் கேம்லோஃப்ட் மேம்பாடுடன் வந்துள்ள புதிய ஸ்னேக் கேம் நிச்சியமாக கலரில் விளையாடும்பொழுது புது விதமான அனுபவத்துடன் உள்ளது.

 வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் ஆப்:

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் ஆப்,புதிய நோக்கியா 3310 பொருத்தவரைப் வாட்ஸ் ஆப் பயன்படுத்தமுடியாது.

சேமிப்புதிறன்:

சேமிப்புதிறன்:

இதன் சேமிப்புதிறன் பொருத்தமாட்டில் 16எம்பி உள்ளடங்கிய சேமிப்பு திறனுடன் விளங்குகின்றது. மேலும் கூடுதலாக 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை இணைத்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இக்கருவி யூஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது,படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவேற்றி கொள்ள இயலும்.

பேட்டரி:

பேட்டரி:

புதிய நோக்கியா 3310 மொபைல் பேட்டரியில் 1200எம்ஏஎச் திறனுடன் 31 நாட்கள் ஸ்டேன்ட் பை டைமுடன் 22 மணி நேர தொடர்ந்து பேசும் வகையிலான திறனைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 3310 3 reasons to buy and not to buy this feature phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X