ஆளுக்கு 2 அள்ளி போடுங்க.. ரூ.1700 டிஸ்கவுண்ட்.. 4ஜி, UPI வசதி, டூயல் சிம், YouTube கொண்ட லேட்டஸ்ட் NOKIA போன்!
4ஜி மற்றும் டூயல் சிம் ஆதரவு.. கிட்டத்தட்ட 10 மணிநேர டால்க்டைம்.. கூடவே யுபிஐ வசதி.. அதுமட்டுமா யூட்யூப் மற்றும் கிளாசிக் ஸ்நேக் கேம் என.. நாஸ்டால்ஜிக் ஆன ஃபீலிங் உடன் சேர்த்து ஒரு லேட்டஸ்ட் மொபைலில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதையெல்லாம் ஒரே பேக்கேஜில் கொண்ட ஒரு நோக்கியா மாடல் அறிமுகமானது!
அது நோக்கியா 3210 4ஜி (Nokia 3210 4G ) மாடலாகும். ஒரிஜினல் நோக்கியா 3210 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு, 25 வது ஆண்டு நிறைவை (25th anniversary of the original Nokia 3210) குறிக்கும் நோக்கத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த பீச்சர் போன் தற்போது அபாரமான ஆபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

அமேசான் வலைத்தளத்தில் தற்போது, நோக்கியா 3210 4ஜி பீச்சர் மொபைல் போன் ஆனது 32% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் விலையான ரூ5,299 க்கு பதிலாக ரூ.3,599 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி நோக்கியா 3210 4ஜி மாடலின் 3 கலர் ஆப்ஷன்களிலும், அதாவது கிரன்ஞ் பிளாக் (Grunge Black), ஸ்கூபா ப்ளூ (Scuba Blue) மற்றும் ஒய்2கே கோல்ட் (Y2K Gold) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
நோக்கியா 3210 4ஜி பீச்சர் போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது யூட்யூப்க்கான அணுகல், 1450எம்ஏஎச் பேட்டரி, 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, யுனிசாக் டி107 சிப்செட், எஃப்எம் ஸ்ட்ரீமிங் என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமான அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (National Payments Corporation of India) அங்கீகரிக்கப்பட்ட ப்ரீ-இன்ஸ்டால்டு யுபிஐ ஆப் ஆகியவைகளை கொண்டுள்ளது.
விரிவான அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா 3210 ஆனது டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வருகிறது. இது 2.4-இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது யுனிசாக் டி107 எஸ்ஓசி (Unisoc T107 SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது எஸ்30பிளஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் (S30+ Operating System) கொண்டு இயங்குகிறது.
ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை நோக்கியா 3210 4ஜி மாடலில் 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி ஸ்டோரேஜ் உள்ளது. சுவாரசியமாக இந்த மொபைல் போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) மூலம் 32ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.
கேமராவை பொறுத்தவரை, இது ரியர் எல்இடி ப்ளாஷ் (Rear LED Flash) உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இந்த போனில் நோக்கியாவின் கிளாசிக் ஸ்னேக் கேமும் (Classic Snake Game) உள்ளது மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி யூட்யூப் (YouTube) மற்றும் யூட்யூப் ம்யூசிக்கிற்கான (YouTube Music) அணுகலும் கிடைக்கும்.
யுபிஐ மற்றும் யூட்யூப் ஆப்களை தவிர்த்து வானிலை (Weather), செய்திகள் (News), சோகோபன் (Sokoban), கிரிக்கெட் ஸ்கோர் (Cricket Score), 2048 கேம் (2048 Game) மற்றும் டெட்ரிஸ் (Tetris) உள்ளிட்ட எட்டு ஆப்களையும் கூட புதிய நோக்கியா 3210 4ஜி மாடல் ஆதரிக்கிறது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உடன் வருகிறது. மேலும் இது வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்-ன் கீழ் எப்எம் ரேடியோ (FM radio with wired and wireless mode) மற்றும் எம்பி3 பிளேயரையும் (MP3 Player) கொண்டுள்ளது. இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் (Headphone Jack), கூடவே யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட்டையும் கொண்டும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை புதிய நோக்கியா 3210 மாடலானது 1450mAh பேட்டரியை பேக் செய்கிறது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 4ஜி நெட்வொர்க்கில் 9.8 மணிநேர டால்க் டைமை (Talk Time) வழங்கும். கடைசியாக இந்த பீச்சர் போன் அளவீட்டில் 122x52x13.14மிமீ உள்ளது.


Click it and Unblock the Notifications








