Home
Mobile

வீட்டுக்கு 2 தூக்குங்க.. ரூ.1760 டிஸ்கவுண்ட்டில் NOKIA 4G போன்.. UPI வசதி, YouTube, 32GB மெமரி, டூயல் சிம்!

ரூ.1000 - ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் 4ஜி மொபைல் போன்கள் ஆனது பலரையும் திருப்தி படுத்தும்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை; மீதமுள்ளவர்கள் ஒரு 4ஜி மொபைல் போனுக்காக ரூ.4000 - ரூ.5000 க்கு மேல் செலவு செய்ய தயாராக இல்லை!

இந்த "இடைவெளியில்" சிக்கிக்கொண்டு எந்த மொபைல் போனை வாங்குவது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் நேராக செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு தான். ஏனென்றால் அங்குதான் விலையை மீறிய பல அம்சங்களை கொண்ட நோக்கியா 3210 4ஜி (NOKIA 3210 4G) மாடல் ஆனது, ரூ.1760 டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.4000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது!

வீட்டுக்கு 2 தூக்குங்க.. ரூ.1760 டிஸ்கவுண்ட்டில் NOKIA 4G போன்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது, நோக்கியா 3210 4ஜி பீச்சர் மொபைல் போன் ஆனது 33% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் விலையான ரூ.5,299 க்கு பதிலாக ரூ.3,539 க்கு வாங்க கிடைக்கிறது. கிரன்ஞ் பிளாக் (Grunge Black), ஸ்கூபா ப்ளூ (Scuba Blue) மற்றும் ஒய்2கே கோல்ட் (Y2K Gold) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களின் மீதும் இந்த தள்ளுபடி கிடைக்கிறது

நோக்கியா 3210 4ஜி பீச்சர் போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் கார்டு
- 4ஜி ஆதரவு
- ப்ரீ-இன்ஸ்டால்டு யுபிஐ ஆப்
- யூட்யூப் அணுகல்
- 32ஜிபி வரை மெமரி
- 450எம்ஏஎச் பேட்டரி
- யுனிசாக் டி107 சிப்செட்
- எஃப்எம் ஸ்ட்ரீமிங்

நோக்கியா 3210 4ஜி பீச்சர் போனின் விரிவான அம்சங்கள்: நோக்கியா 3210 ஆனது டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வருகிறது. இது 2.4-இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது யுனிசாக் டி107 எஸ்ஓசி (Unisoc T107 SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது எஸ்30பிளஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் (S30+ Operating System) கொண்டு இயங்குகிறது.

ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை நோக்கியா 3210 4ஜி மாடலில் 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி ஸ்டோரேஜ் உள்ளது. சுவாரசியமாக இந்த மொபைல் போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) மூலம் 32ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

கேமராவை பொறுத்தவரை, இது ரியர் எல்இடி ப்ளாஷ் (Rear LED Flash) உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இந்த போனில் நோக்கியாவின் கிளாசிக் ஸ்னேக் கேமும் (Classic Snake Game) உள்ளது மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி யூட்யூப் (YouTube) மற்றும் யூட்யூப் ம்யூசிக்கிற்கான (YouTube Music) அணுகலும் கிடைக்கும்.

யுபிஐ மற்றும் யூட்யூப் ஆப்களை தவிர்த்து வானிலை (Weather), செய்திகள் (News), சோகோபன் (Sokoban), கிரிக்கெட் ஸ்கோர் (Cricket Score), 2048 கேம் (2048 Game) மற்றும் டெட்ரிஸ் (Tetris) உள்ளிட்ட எட்டு ஆப்களையும் கூட புதிய நோக்கியா 3210 4ஜி மாடல் ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உடன் வருகிறது. மேலும் இது வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்-ன் கீழ் எப்எம் ரேடியோ (FM radio with wired and wireless mode) மற்றும் எம்பி3 பிளேயரையும் (MP3 Player) கொண்டுள்ளது. இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் (Headphone Jack), கூடவே யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட்டையும் கொண்டும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை புதிய நோக்கியா 3210 மாடலானது 1450mAh பேட்டரியை பேக் செய்கிறது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 4ஜி நெட்வொர்க்கில் 9.8 மணிநேர டால்க் டைமை (Talk Time) வழங்கும். கடைசியாக இந்த பீச்சர் போன் அளவீட்டில் 122x52x13.14மிமீ உள்ளது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
NOKIA 3210 4G Selling At Discounted Price in Flipkart Check Out Offer Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X