Home
Mobile

ஆரம்பமே ஆஃபர்.. 4ஜி ஆதரவு.. யூடியூப்.. UPI.. புதிய Nokia போன் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் எச்எம்டி பெயரில் போன்களை அறிமுகம் செய்தாலும் நோக்கியா பெயரில் போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. அதாவது தற்போது கூட ஒரு புதிய நோக்கியா போனை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் நோக்கியா 3210 4ஜி (Nokia 3210 4G) போன் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் தற்போது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நோக்கியா மொபைல் போன்றே புதிய நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா 3210 போனின் அம்சங்கள், விலை மற்றும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆரம்பமே ஆஃபர்.. புதிய Nokia போன் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?

நோக்கியா 3210 4ஜி அம்சங்கள் (Nokia 3210 4G specifications): புதிய நோக்கியா 3210 2024 மாடல் ஆனது 2.4-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு QVGA ரெசல்யூஷன் மற்றும் சி 2024றந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த நோக்கியா 3210 2024 மாடலில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 2எம்பி மெயின் கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனில் 128எம்பி ஸ்டோரேஜ் மற்றும் 64எம்பி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது இதில் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான யுனிசாக் டி107 பிராசஸர் (Unisoc T107 Processor) வசதியுடன் நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக எஸ்30 பிளஸ் (S30+​) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது அசத்தலான நோக்கியா 3210 2024 மாடல்.

இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். எம்பி3 பிளேயர் (MP3 Player), எஃப்எம் ரேடியோ (FM Radio)ஆதரவு கொண்டுள்ளது நோக்கியா 3210 2024 மாடல். இதுதவிர கிளவுட் ஆப்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய நோக்கியா போன். மேலும் இந்த போனில் இன்-பில்ட் UPI அம்சமும் உள்ளது, இது ஸ்கேன் செய்து பணம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது.

யூடியூப் ஷார்ட்ஸ், செய்திகள், வானிலை, ஸ்னேக் கேம் (Snake Game) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உடன் இந்த நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு புளூடூத் 5.0, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.

ஆரம்பமே ஆஃபர்.. புதிய Nokia போன் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?

1450எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய நோக்கியா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 9.8 மணிநேரம் வரை டாக்டைம் வழங்கும் இந்த போன். நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தருவதால் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் டூயல் சிம் 4ஜி ஆதரவை வழங்குகிறது நோக்கியா 3210 2024 போன். கிரன்ஞ் பிளாக் (Grunge Black), Y2K கோல்ட் (Y2K Gold) மற்றும் ஸ்கூபா ப்ளூ (Subba Blue) நிறங்களில் இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது.

எச்எம்டி மற்றும் அமேசான் தளங்களில் நோக்கியா 3210 2024 போனை வாங்க முடியும். இந்த போனின் ஆரம்ப விலை ரூ.3,999-ஆக உள்ளது. பின்பு அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.3149 இருந்தால் போதும் இந்த நோக்கியா 3210 2024 போனை வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 3210 4G launched in India: check specifications, price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X