Home
Mobile

Nokia-னா சும்மாவா? புதுப்பொலிவுடன் சிங்கம் களமிறங்குது.. மீண்டும் விற்பனைக்கு வரும் Nokia 3210.. என்ன விலை?

நோக்கியாவின் (Nokia) பிரபலமான நோக்கியா 3210 (Nokia 3210) மாடல் மீண்டும் சந்தைக்கு வரவிருக்கிறது. ஆனால், இந்த முறை புதுப்பொலிவுடன், மிரட்டலான அம்சங்களுடன், கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜி விருப்பத்துடன் வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

உலகில் உள்ள அணைத்து மக்களையும் மொபைல் டிவைஸ் வாங்கி பயன்படுத்த உதவிய சாதனம் என்றால், அது நோக்கியா 3210 (Nokia 3210) தான் என்று அடித்து கூறலாம். 90-களில் மிகவும் பிரபலமான சாதனமாக இந்த நோக்கியா 3210 சாதனம் திகழ்ந்தது. இந்த நோக்கியா 3210 அறிமுகம் செய்யப்பட்டு ஏறக்குறைய சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது, மீண்டும் நோக்கியா பிராண்டின் கீழ் இந்த சாதனம் வெளிவரவிருக்கிறது.

Nokia-னா சும்மாவா? புதுப்பொலிவுடன் சிங்கம் களமிறங்குது..

புதுப்பொலிவை பெரும் நோக்கியா 3210 (New Nokia 3210):

எச்எம்டி (HMD) குளோபல் நிறுவனம் தான் இப்போது நோக்கியா பிராண்டிங் உரிமையை கொண்டுள்ளது. சமீபத்தில், நோக்கியா பிராண்டின் கீழ் நோக்கியா 6310 (நோக்கியா 6310) மொபைல் சாதனத்தை ரீலான்ச் செய்யப்பட்டது. இப்போது, நோக்கியா பிராண்ட் மீண்டும் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 90-களில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நோக்கியா 3210 சாதனமாக இருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.

தெரியாதவர்களுக்கு, நோக்கியா 3210 மொபைல் சாதனத்தை நிறுவனம் 1999 இல் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த மொபைல் சாதனத்தை இந்த காலத்திற்கு ஏற்றார் போல, நோக்கியா நிறுவனம் மருவடிவமைப்பு செய்து, இதில் உள்ள பல முக்கியமான அம்சங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல உருவாக்கியுள்ளது. புதிய டிசைன், கூடுதல் ஸ்டோரேஜ், 4ஜி அம்சம் என்று எல்லாமே இதில் இடம்பெறப்போகிறது.

நோக்கியா 3210 (2024) மாடல் புது பொலிவுடன் இப்போது இணையதளத்தில் காணப்படுகிறது. பின்பக்கத்தில் இந்த சாதனம் கிடைமட்டகமாக அச்சிடப்பட்ட நோக்கியா பிராண்டிங் லோகோவை கொண்டுள்ளது. இந்த போனின் புதிய அம்சமாக இதன் பின்பக்கத்தில் 2 மெகா-பிக்சல் கேமராவை (2MP Camera) கொண்டுள்ளது. இந்த போனில் கேமரா அம்சம் இடம்பெற்றிருப்பது பாராட்டிற்குரியது என்றாலும், 2 மெகாபிக்சல் கேமரா இன்றைய காலகட்டத்திற்கு போதாதது என்பதே உண்மை.

Nokia 3210 போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்?

இந்த மருவடிவமைப்பு செய்யப்பட்ட நோக்கியா 3210 2024 சாதனம் 2.4" இன்ச் அளவு கொண்ட QVGA டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த சாதனம் யூனிஸாக் T107 பிராசஸர் (Unisoc T107 Processor) உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 3210 சாதனம் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் அல்லது 128GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்கும் மைக்ரோSD கார்டு (microSD) விருப்பத்தையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 1450mAh பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இந்த போனில் கிளாசிக் கேம் ஆன ஸ்நேக் கேம் கூட இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது டூயல் சிம் கார்டு (Dual SIM card), நானோ சிம் வசதி (Nano SIM), ப்ளூடூத் 5.0 வெர்ஷன், USB டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களையும் வழங்கும்.

இந்த நோக்கியா 3210 3.5mm ஹெட்போன் ஜாக் உடன் 4ஜி சப்போர்ட் உடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனம் இந்திய மதிப்பில் ரூ. 7,999 என்ற விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா சந்தையில் இந்த சாதனம் மே 15ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கு இந்த சாதனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 3210 (2024) Mobile 64GB or 128GB Storage 2MP Camera Dual Nano SIM 4G with Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X