Home
Mobile

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 4ஜி ஆதரவு.. யூடியூப்.. புதிய Nokia போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

எச்எம்டி நிறுவனம் தொடர்ந்து நோக்கியா போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதாவது இந்நிறுவனம் எச்எம்டி பெயரில் போன்களை அறிமுகம் செய்தாலும் நோக்கியா பெயரில் போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. தற்போது ஒரு புதிய நோக்கியா போனை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நோக்கியா மொபைல் போன்றே புதிய நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா 3210 2024 மாடல் ஆனது அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. புதிய Nokia போன் அறிமுகம்.. எந்த மாடல்?

நோக்கியா 3210 2024 அம்சங்கள் (Nokia 3210 2024 specifications): 2.4-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் புதிய நோக்கியா 3210 2024 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் QVGA ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக நோக்கியா 3210 2024 போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 2எம்பி மெயின் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 3210 2024 மாடல். அதேபோல் இந்த போனில் 128எம்பி ஸ்டோரேஜ் மற்றும் 64எம்பி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது இதில் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. புதிய Nokia போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த யுனிசாக் டி107 பிராசஸர் (Unisoc T107 Processor) வசதியுடன் நோக்கியா 3210 2024 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் எஸ்30 பிளஸ் (S30+​) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது அசத்தலான நோக்கியா 3210 2024 மாடல்

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதேபோல் எம்பி3 பிளேயர் (MP3 Player), எஃப்எம் ரேடியோ (FM Radio)ஆதரவு கொண்டுள்ளது நோக்கியா 3210 2024 மாடல். கிளவுட் ஆப்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா போன்.

யூடியூப் ஷார்ட்ஸ், செய்திகள், வானிலை, ஸ்னேக் கேம் (Snake Game) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா 3210 2024 மாடல். மேலும் புளூடூத் 5.0, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 3210 2024.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. புதிய Nokia போன் அறிமுகம்.. எந்த மாடல்?

1450எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் நோக்கியா 3210 2024 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 9.8 மணிநேரம் வரை டாக்டைம் வழங்கும் இந்த போன். நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தருவதால் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் டூயல் சிம் 4ஜி ஆதரவை வழங்குகிறது நோக்கியா 3210 2024 போன். கிரன்ஞ் பிளாக் (Grunge Black), Y2K கோல்ட் (Y2K Gold) மற்றும் சுப்பா ப்ளூ (Subba Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஆனால் நோக்கியா 3210 2024 மாடல் ஆனது தற்போது ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் யுகே ஆகிய நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த நோக்கியா போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நோக்கியா 3210 2024 மாடலின் விலை EUR 89 (இந்திய மதிப்பில் 7,990) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 3210 2024 4G feature phone launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X