Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 40 நாட்கள் பேட்டரி.. 10W சார்ஜிங்.. புது Nokia பீச்சர் போன்.. எந்த மாடல்?

சிங்கிள் சார்ஜில் 40 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரியுடன் நோக்கியா 300 சார்ஜ் (Nokia 300 Charge) பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்துள்ளது. இதனால், நோக்கியா 300 சார்ஜ் பீச்சர் போன் மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

நோக்கியா போன்கள் என்றாலே குவாலிட்டி மற்றும் பேட்டரி பக்காவாக இருக்கும். இப்போது, எச்எம்டி நிறுவனத்தின் பெயரில் நோக்கியா மாடல்கள் வெளியாகி வருகின்றன. இதில் அதிக பேட்டரி பேக்கப் கொடுக்கும் பீச்சர் போன் மாடலாக நோக்கியா 300 சார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 40 நாட்கள் பேட்டரி.. 10W சார்ஜிங்!

இந்தியாவிலும் எச்எம்டி (HMD) நிறுவனத்தின் பீச்சர் போன் மாடல்கள் வெளியாகி வருவதால், இந்த நோக்கியா 300 சார்ஜ் மாடலுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவில் வெளியாகுமா அல்லது வெளியாகாதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கு முன்பாக பீச்சர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் இந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை பார்க்கலாம்.

நோக்கியா 300 சார்ஜ் அம்சங்கள் (Nokia 300 Charge Specifications): 3700mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த நோக்கியா 300 சார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால், பீச்சர் போன்களில் 3000mAh கேபாசிட்டி கொண்ட மாடல்களே பெரும்பாலும் வராது. ஆனால், இதில் 3700mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக ஃபாஸ்ட் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளது.

ஆகவே, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 40 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கொடுக்கும். 37 மணி நேரங்களுக்கு டாக்டைம் பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரியை கலட்டி மாற்றி கொள்ள முடியும். பேட்டரியுடன் 14.94 எம்எம் தடிமன் வருகிறது. 138 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

4 எம்பி ரேம் + 4 எம்பி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக இந்த நோக்கியா 300 சார்ஜ் வெளியாகி இருக்கிறது. மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், 32 ஜிபி வரையில் மட்டுமே மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கும். யுனிசோக் எஸ்சி6531இ (Unisoc SC6531E) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. எஸ்30+ (S30+​) ஓஎஸ் கொண்ட மாடலாக இந்த நோக்கியா 300 சார்ஜ் இருக்கிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் மினி சிம் (Dual Mini SIM) சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 மைக்ரோபோன் மற்றும் 1 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. கியூவிஜிஏ (QVGA) ரியர் கேமராவை கொடுத்துள்ளது.

2.4 இன்ச் கியூவிஜிஏ டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பிலிப்பைன் பெசோ (Philippine peso) மதிப்பில் PHP 2190 ஆகிய விலை இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.3,384 ஆக விலை இருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் வெளியானால், ரூ.3,500 விலைக்கு கிடைக்கலாம். பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் ஸ்டாண்ட்ஸ்டோன் (Sandstone) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia 300 Charge With 3700mAh Battery 10W Fast Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X