Home
Mobile

அடிதூள்.. ரூ.3,110 விலையில் களமிறங்கிய Nokia 4ஜி போன்.. 3700எம்ஏஎச் பேட்டரி.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

எச்எம்டி (hmd) குளோபல் நிறுவனம் சமீபத்தில் சில 4ஜி நோக்கியா போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு தரமான 4ஜி போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதாவது நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் (Nokia 300 4G Power Bank) போனை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அந்த நாட்டில் இந்த புதிய நோக்கியா போனின் முன்பதிவு தொடங்கி உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்க்கலாம்.

அடிதூள்.. ரூ.3,110 விலையில் களமிறங்கிய Nokia 4ஜி போன்.. எந்த மாடல்?

நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் அம்சங்கள் (Nokia 300 4G Power Bank Specifications): 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே உடன் நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல் வெளியாகி உள்ளது. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தை தரும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

3700எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல். அதுவும் இந்த மாடல் 45 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைமையும் (45 days of standby time), 26 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் டைமையும் (26 hours of music playback time) வழங்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

அதேபோல் இந்த நோக்கியா போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. ஆகவே இதை ஒரு பவர் பேங்காகவும் பயன்படுத்த முடியும். அதுவும் இந்த போனின் பக்கவாட்டில் உள்ள ஒரு பட்டன் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை செயல்படுத்துகிறது.

இந்த நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடலின் பிராசஸர் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த போனில் யுனிசாக் பிராசஸர் இருக்கும் என்று கூறப்படுகிறது. 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய நோக்கியா போனில் உள்ளது.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல். மேலும் 0.3எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிதூள்.. ரூ.3,110 விலையில் களமிறங்கிய Nokia 4ஜி போன்.. எந்த மாடல்?

பிளாக், கோல்ட், கிரீன் நிறங்களில் இந்த நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல் வெளியாகி உள்ளது. இந்த போனின் டார்ச்சைப் பற்றிப் பேசுகையில், இது ஒரு சாதாரண ஃபீச்சர் ஃபோனை விட 5 மடங்கு பிரகாசமானது என்றும், ஐபோன் 16 ப்ரோவில் உள்ள LED ஃபிளாஷை விட 2 மடங்கு பிரகாசமானது என்றும் HMD நிறுவனம் கூறியுள்ளது.

4ஜி சப்போர்ட், எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த புதிய நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடலில் உள்ளன. மேலும் இந்த புதிய நோக்கியா போனின் விலை PHP 1,990 (இந்திய மதிப்பில் ரூ.3,110)-ஆக உள்ளது.

photo credits: smashx_60, notebookcheck, gizmochina

Best Mobiles in India

English summary
Nokia 300 4G Power Bank pre orders begin in the Philippines: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X