இந்தியாவில் ரூ.9,499/-க்கு நோக்கியா 3 : நோக்கியா கேர் மற்றும் சர்வீஸ் எப்படி.?

|

இந்த வாரத்திற்கு முன்னதாக, நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

அதில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆப்லைனில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் மறுபக்கம் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியாவில் பிரத்யேகமாக விறபனைக்கு வரும்.

இதர இரண்டு கருவிகளும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வந்து சந்தையில் கிடைடைக்கக் கூடும் போது, நுழைவு நிலை சாதனமண நோக்கியா 3 ஸ்மார்ட்போன் இன்று நாட்டில் விற்பனைக்கு வருகிறது.

சில்லறை கடைகளில்

சில்லறை கடைகளில்

நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9.499/- என்ற இந்திய விலை நிர்ணயம் பெற்றுள்ளது. எச்எம்டி நிறுவனம் இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை நியமனம் செய்துள்ளது மற்றும் நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளில் இக்கருவி கிடைக்கும்.

100-க்கும் மேற்பட்ட நகரங்களில் சர்வீஸ்

100-க்கும் மேற்பட்ட நகரங்களில் சர்வீஸ்

மேலும், நோக்கியா மொபைல் கேர் ஆனது 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. இதன் மூலம் விற்பனை நெட்வொர்க் வலுவாக உள்ளது. மேலும் இந்த நோக்கியா மொபைல் கேர் சர்வீஸ் மூலம் நோக்கியா ஸ்மார்ட்போனின் பயனர்கள், 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் சர்வீஸ்களுக்கான பிக்அப் மற்றும் டிராப்களை நிகழ்த்தலாம்.

டிஸ்ப்ளே, ரேம்

டிஸ்ப்ளே, ரேம்

நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி ஒரு பாலிகார்பனேட் உடலை கொண்டுள்ளது. 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த சாதனம் ஒரு மைக்ரோஎஸ்டி அதை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஜோடியாக ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 எஸ்ஓசிமூலம் இயங்குகிறது.

கேமிரா, பேட்டரி

கேமிரா, பேட்டரி

இமேஜிங் துறையில், முன் மற்றும் பின்புறத்தில் இரட்டை 8 எம்பி கேமிராக்களை கொண்டுள்ளது. மற்றும் நௌவ்கட், ஓடிஜி, 4ஜி எல்டிஇ ஆதரவுகளுடன் 2650எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

சலுகை

சலுகை

இக்கருவி சார்ந்த சலுகைகளை பொறுத்தமட்டில் ரூ.9,499/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 3 வாங்குபவர்கள் வோடபோன் நிறுவனத்திடம் இருந்து ரூ.149/- மதிப்புள்ள 5ஜிபி தரவை மூன்று மாதத்திற்கு பெறுவர். மேலும், மேக்மைட்ரிப்.காம் (Makemytrip.com) சலுகையொன்றில் நோக்கியா 3 வாங்குவோர் ரூ.1,800/- மதிப்புள்ள ஹோட்டல்களுக்கான பயன்பாடு மற்றும் ரூ.700/- மதிப்புள்ள உள்நாட்டு விமானங்களுக்கான பயன்பாடு ஆகியவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்டீரியோ ஹெட்செட் டபுள்யூஎச்-201

ஸ்டீரியோ ஹெட்செட் டபுள்யூஎச்-201

நிறுவனம் நோக்கியா 3 ஸ்மார்ட்போனுக்கு பல வகையான இணைப்பு ஆதரவுகளை துணைபுரிகிறது. அதில் ஒன்று ஸ்டீரியோ ஹெட்செட் டபுள்யூஎச்-201 துணை ஆகும். இவ்வகை ஹெட்போன்கள் நாய்ஸ் ரெடக்ஷன் சார்ந்த விடயங்களில் நல்ல நிலைப்பாட்டையும் அதே சமயம் ஆடியோ கசிவையும் தடுக்க வல்லது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 3 sale starts in India at Rs. 9,499. Read more this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X