விரைவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 (விலை, அம்சங்கள்).!

இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் குறிப்பிடத்தக்க நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளியாகலாம்.!

|

நோக்கியா - சொன்னதை செய்கிறது, உடன் சொல்லாதவைகளும் சேர்த்தே செய்கிறது. மொபைல் என்று கூறினாலே நோக்கியா கருவிகள் தான் முதலில் நமது நினைவிற்குள் உதிக்கும். அப்படியான பிரபலத்தன்மை கொண்ட நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் வருகையால் காணாமலாடிக்கப்பட்டது என்றே கூறலாம்.

பின்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் உடன் இணைந்து லூமியா ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிட்ட போதிலும் நோக்கியாவினால் மீண்டும் சந்தையை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ஆனால், நோக்கியா மீண்டும் அதன் ஸ்மார்ட்போன் கருவிகள் மூலம் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நோக்கியா கருவி விரும்பிகளுக்குள்ளும் இருந்தது.

உலகையே திரும்பி பார்க்க வைத்தது

உலகையே திரும்பி பார்க்க வைத்தது

அந்த நம்பிக்கையை வீண் செய்யாத வண்ணம் நோக்கியா நிறுவனம் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் அதன் பிராண்ட் பெயர் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை வழங்கி யாரும் எதிர்பாராத நேரத்தில் நோக்கியா 6 கருவியை அறிமுகம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது.!

குறிப்பிடத்தக்க கருவிகள் வெளியாகலாம்

குறிப்பிடத்தக்க கருவிகள் வெளியாகலாம்

அன்று முதல் இன்று வரை நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் சார்ந்த செய்திகள், லீக்ஸ்கள், புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை எனலாம். குறிப்பாக இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் குறிப்பிடத்தக்க நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹை-எண்ட்

ஹை-எண்ட்

அந்த எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் வண்ணம் சில புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் சார்ந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியான நோக்கிஓயா 6 கருவி ஒரு ஹை-எண்ட் சாதனமாக இல்லாத போதிலும் கூட ஒரு சூடான பலகாரம் போல சீனாவில் விற்பனையாகிக் கொண்டிருக்க அடுத்து வெளிவரும் கருவிகள் நோக்கியாவை சந்தையின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஹை-எண்ட்

ஹை-எண்ட்

அந்த எதிர்பார்ப்பிற்கு விருந்தளிக்கும் வண்ணம் சில புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் சார்ந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியான நோக்கிஓயா 6 கருவி ஒரு ஹை-எண்ட் சாதனமாக இல்லாத போதிலும் கூட ஒரு சூடான பலகாரம் போல சீனாவில் விற்பனையாகிக் கொண்டிருக்க அடுத்து வெளிவரும் கருவிகள் நோக்கியாவை சந்தையின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நோக்கியா 3, நோக்கியா 5

நோக்கியா 3, நோக்கியா 5

வெளியான தகவலின்படி யாரும் எதிர்பார்த்த, இதுவரை எந்த லீக்ஸ் தகவலில் கூட சிக்காத நோக்கியா 3, நோக்கியா 5 பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கருவிகள் நடைபெறும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் ஏற்கனவே வெளியான நோக்கியா 6 கருவி உலக சந்தைகளுக்கு விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5

நோக்கியா 5

கசிவிகளின்படி நோக்கியா 5 ஒரு 5.2-அங்குல 720பி எச்டி தொடுதிரை கொண்ட மற்றும் 2ஜிபி ரேம், ஒரு 12 எம்பி முதன்மை கேமரா மற்றும் நோக்கியா 6 போன்றே ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி கொண்டிருக்கும்.

நோக்கியா 3

நோக்கியா 3

நோக்கியா 3 கருவியை பொறுத்தம்மட்டில் அதன் வன்பொருள் அம்சங்கள் வெளியாகவில்லை ஆனால் சுமார் ரூ.11,000/- என்ற விலை நிர்ணயம் பெறும் என்று பரிசீலிக்கப்பட்டுள்ளதுத்து. அடிப்படையில் பார்த்தல் நோக்கியா 5 கருவிக்கு கீழான அம்சங்கள் கொண்டிருக்கலாம்.

நோக்கியா 6, 5

நோக்கியா 6, 5

நோக்கியா 6 மற்றும் நோக்கியா 5 கருவிகளை பொறுத்தவரை முறையே சுமார் ரூ .18,000/- மற்றும் சுமார் ரூ.14,000/- என்ற விலை நிர்ணயத்தை பெறும்.

3310 கருவி

3310 கருவி

மேலும் முக்கியமாக, நோக்கியா கிளாசிக் கருவிகள் மீண்டும் வெளியாகும் என்றும் லீஸ்ட் தெரிவிக்கிறது. வெளியான வதந்திகள் உண்மையாகினால் நோக்கியாவின் மிக பிரபலமான மொபைல் போன் ஆன 3310 கருவியை மீண்டும் நாம் சந்தைகளில் காண முடியும். அவைகள் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதுப்பிக்கப்பட்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பழைய மாடல்களில் புதிய ஆண்ட்ராய்டு

பழைய மாடல்களில் புதிய ஆண்ட்ராய்டு

முன்பு வெளியான தகவலின்படி எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியாவின் க்ளாஸிக் கருவிகளான, அதாவது அந்த காலத்து கருவிகளான நோக்கியா 'என்' வரிசை கருவிகளுக்கான ட்ரேட்மார்க்கை பதிவு செய்துள்ளது. அதன் மூலம் பழைய மாடல்களில் புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

Best Mobiles in India

English summary
Nokia 3, 5 and revamped 3310 details leaked along with European price points. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X