அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5 (விலை, அம்சங்கள், இந்திய வெளியீடு).!

இந்தியாவில் எப்போது கிடைக்கும்.? என்ன விலை.? என்னென்ன அம்சங்கள்.? வேறென்ன நோக்கியா அப்டேட்ஸ்.?

|

நோக்கியாவிற்கு "எல்லாமே இனிமே நல்லத்தான் நடக்கும்" மற்ற நிறுவனங்களுக்கு கொளுத்தினாலும் பட்டாசு வெடிக்காது. காரணம் - அறிமுகம் ஆனது உலகம் முழுவதிலும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளான நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 (உலக பதிப்பு) மற்றும் நமது பழைய நண்பனான அதே நோக்கியா 3310 கருவியின் அப்டேட்டட் வெர்ஷன்.!

அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5 (விலை, அம்சங்கள், இந்திய வெளியீடு)

இக்கருவிகள் இந்தியாவில் எப்போது கிடைக்கும்.? என்ன விலையில் கிடைக்கும்.? என்னென்ன அம்சங்கள் உள்ளன.? அதில் சிறப்பம்சம் என்ன.? வேறென்ன நோக்கியா அப்டேட்ஸ்.? - உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இதோ தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்தின் பதில்கள்.!

அறிமுகம்

அறிமுகம்

பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாகும் என்று நாம் முன்னரே கணித்தபடி நேற்று (ஞாயிறு) நடந்த வெளியீட்டு நிகழ்வில் நோக்கியா பிராண்ட் பங்குதாரர் ஆன எச்எம்டி குளோபல் நிறுவனம் இரண்டு புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்தது.

கிளாஸிக்

கிளாஸிக்

உடன் கடந்த மாதம் சீனாவில் தொடங்கப்பட்ட நோக்கியா 6 கருவியின் உலகளாவிய பதிப்பும் நேற்று அறிமுகமானது. இதே நிகழ்வில் கிளாஸிக் கருவியான நோக்கியா 3310 (2017) பீச்சர் போனும் வெளியிடபட்டுள்ளது.

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 விலை

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 விலை

முற்றிலும் புதிய நோக்கியா 3 கருவியின் விலை சுமார் ரூ. 9,800/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் நோக்கியா 5 கருவி சுமார் ரூ.13,500/- என்ற விலையில் வெளி வருகிறது. மறுபுறம் நோக்கியா 6 சுமார் ரூ.16,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டு கிடைக்க வேண்டும்.

ஹை கிளாஸ் பியானோ

ஹை கிளாஸ் பியானோ

உடன் நோக்கியா நிறுவனத்தின் ஹை கிளாஸ் பியானோ கருப்பு நிற மாறுபாட்டில் புதிய நோக்கியா 6 கருவியின் கருப்பு மாறுபாடும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விலை சுமார் ரூ.21,000/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 இந்தியா வெளியீடு

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 இந்தியா வெளியீடு

எச்எம்டி குளோபல் நிறுவனம் ஆனது நோக்கியா 6 கருவி இந்தியாவில் வெளியாகும் அதே நேரத்தில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களையும் வெளியிடும் என்று அறிவித்துள்ளது அதாவது 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய சந்தைகளில் நோக்கியா கருவிகள் கிடைக்கும்.

இரண்டாம் காலாண்டிற்குள்

இரண்டாம் காலாண்டிற்குள்

வெளிய அனைத்து புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கலும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் வெளியிட எச்எம்டி திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நௌவ்கட்

நௌவ்கட்

நோக்கியா 3 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவகட் கொண்டு இயங்க நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

மேம்படுத்தல்கள்

மேம்படுத்தல்கள்

வெளியீட்டு நிகழ்வில் அனைத்து புதிய நோக்கியா கருவிகளும் ஆண்ட்ராய்டு கொண்டு தான் இயங்கும் என்று அவைகளில் வழக்கமான மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதாவது பிற நௌவ்கட் ஸ்மார்ட்போன்கள் போன்றே, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 கருவிகளில் கூகுள் போட்டோஸ் ஆப் மீதான வரம்பற்ற க்ளவுட் சேமிப்பு வரும்.

சிம்

சிம்

இரண்டு கருவிகளும் ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் கிடைக்கப்பெறும் மற்றும் கிடைக்கும் சந்தைகளை பொறுத்து அது வேறுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ண வகை

வண்ண வகை

நோக்கியா 3 ஒரு பாலிகார்பனேட் உடல், இயந்திர அலுமினிய சட்டம் கொண்டுள்ளது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் அடுக்கு கொண்டு வரும். இக்கருவி வெள்ளி வெள்ளை, மேட் பிளாக், டெம்பர்டு நீலம், மற்றும் காப்பர் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

சேமிப்பு

சேமிப்பு

உடன் நோக்கியா 3 ஒரு 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா 3 கருவி ஒரு 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் ஆதரவும் வழங்குகிறது

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 3 கருவி 8 மெகாபிக்சல் முன்பக்க மற்றும் பின்புற கேமரா கொண்டுள்ளத்து. இரண்டு கேமராக்களுமே ஆட்டோ போகஸ் கொண்டுள்ளது. உடன் இந்த பிளாஷ் ஆனது ஒரு ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு ஒருங்கிணைந்த 2650எம்ஏஎச் பேட்டரி கொண்ட நோக்கியா 3 ஆனது அளவீடுகளில் 143.4x71.4x8.4மிமீ உள்ளது. 4ஜி எல்டிஇ ஆதரவு வழங்கும் இக்கருவி 150எம்பிபிஸ் பதிவிறக்க வேகம் மற்றும் 50எம்பிபிஎஸ் அளவிலான அப்லோட் வேகம் வழங்கும்.

இரண்டு வகை

இரண்டு வகை

மறுபுறம், நோக்கியா 5 கருவியின் ஹோம் பொத்தானில் பதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் உள்ளது. எச்எம்டி க்ளோபல் இக்கருவியை "தடையற்ற" உலோக உடல் என்று பெருமையாக கூறுகிறது. நோக்கியா 3 போன்றே ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் என இரண்டு வகைகளில் இக்கருவி கிடைக்கும். நோக்கியா 5 நிறுவனத்திடம் இருந்து வழக்கமான மேம்படுத்தல்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

நோக்கியா 5 கருவி 2ஜிபி ரேம் இணைந்த ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபிவரை நீட்டிக்கும் ஆதரவு வழங்குகிறது.

கேமரா

கேமரா

5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (720x1280 பிக்சல்கள்) எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு வரும் இக்கருவி பிடிஏஎப் மற்றும் டூவல் டோன் பிளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ (84-கோணங்கள் வியூ லென்ஸ்) கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

டெம்பர்டு ப்ளூ, வெள்ளி, மேட் பிளாக், மற்றும் காப்பர் வண்ணங்களில் கிடைக்கும் இக்கருவி அளவீட்டில் 149.7x72.5x8.05மிமீ கொண்டுள்ளது. 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் அம்சங்கள்.!

Best Mobiles in India

English summary
Nokia 3, Nokia 5 Android Phones Launched at MWC 2017: Price, India Launch, Specifications, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X