ரூ.9,800/-க்கு நோக்கியா 3 - இதை விட வேறென்ன வேண்டும்.!?

நோக்கியா 3 - பர்ஸ்ட் லுக்.!

|

இனி நோக்கியா ஆண்ட்ராய்டு தான் - ஸ்மார்ட்போன் உலகின் பெயர் சூட்டப்படாத ராஜாகவாக திகழப்போகிறது. அதில் சந்தேகமே வேண்டாம், மீறி எழுந்தால் உங்களுக்கு விளக்கமளிக்க ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் ஏகப்பட்ட விடைகள் தயாரக உள்ளது. அவைகளில் ஒரு முக்கியமான பிரதான பிரிவு தான் - பட்ஜெட்.!

ரூ.9,800/-க்கு நோக்கியா 3 - இதை விட வேறென்ன வேண்டும்.!?

எல்லாமே பட்ஜெட் என்ற புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது. எந்தவொரு புதிய கருவி சார்ந்த செய்திகளை படிக்கும் போதும் நம் கண்கள் முதலில் தேடுவது இக்கருவியின் கருவி என்ன என்பதுதான், விலை பட்ஜெட்டிற்குள் அடங்கினால் மட்டுமே மேற்கொண்டு அம்சங்கள் பற்றிய விவரங்களையெல்லலாம் ஆராய்வோம் என்பது வெளிப்படை.!

அப்படியானதொரு பட்ஜெட் விலையில் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன் கிடைத்தால், அதுவும் நமது ட்ரீம் கருவிகளான நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போனாக இருந்தால் - டபுள் டமாக்கா தான்.!

இந்தியாவில்

இந்தியாவில்

நோக்கியா 3 கருவியானது நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3310 ஆகிய கருவிகளுடன் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இக்கருவிகள் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் இந்தியாவில் (நோக்கியா 6 உடன் இணைந்து) கிடைக்கும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

லோ மிட்-ரேன்ஜ்

லோ மிட்-ரேன்ஜ்

வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் நோக்கியா 3 கருவியானது மிட்-ரேன்ஜ் எனப்படும் நடுத்தர விலை நிர்ணயம் கொண்ட கருவிகளை விட குறைவான விலை நிர்ணயத்தை பெற்று ஒரு லோ மிட்-ரேன்ஜ் கருவியாக திகழ்கிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அதாவது வெளியான 3 நோக்கியா ஆண்ட் ராய்டு கருவிகளிலேயே மிகவும் மலிவான கருவி இதுதான் - 139 யூரோ அதாவது சுமார் ரூ.9,800/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் நோக்கியா 3 கருவியானது நோக்கியாவின் ஒரு சிறப்பான பட்ஜெட் வகை கருவிகளில் முதல் இடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாலிகார்பனேட் பாடி

பாலிகார்பனேட் பாடி

மெஷிநெட் (இயந்திர) அலுமினிய சட்டம் கொண்ட ஒரு பாலிகார்பனேட் பாடி கொண்ட நோக்கியா 3 கருவியின் முன்பக்கம் கொரில்லா கிளாஸ் மூலம் வலுவூட்டப்படுகிறது. ஒரு பட்ஜெட் கைபேசியாக இருப்பினும் கூட ஒரு பிரீமியம் பூச்சு வடிவமைப்பு கொண்டுள்ளது.

வண்ண வகை

வண்ண வகை

கெப்பாசிட்டிவ் பொத்தான்கள் கொண்டுள்ள இந்த சாதனமானது வெள்ளி வெள்ளை, மேட் பிளாக், டெம்பர்டு நீலம், மற்றும் காப்பர் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.

டிஸ்ப்ளே, செயலி

டிஸ்ப்ளே, செயலி

5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள நோக்கியா 3 கருவியானது 2ஜிபி இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படும்.

மெமரி, பேட்டரி

மெமரி, பேட்டரி

128ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி மூலமான மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும் இக்கருவி 16ஜிபி உள்ளடக்க சேமிப்பும் வழங்குகிறது. உடன் ஒரு 2650எம்ஏஎச் பேட்டரிதிறன் அடைதுள்ளது.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை பொறுத்தம்மட்டில் முன் மற்றும் பின்பக்கம் என இரண்டிலுமே 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களிலுமே ஆட்டோ போகஸ் மற்றும் டிஸ்பிளே பிளாஷ் அம்சம் இடம் பெறுகிறது.

வேகம்

வேகம்

அளவீட்டில் 143.4x71.4x8.4மிமீ கொண்டுள்ள இக்கருவி 4ஜி, எல்டிஇ ஆதரவுடன் 150எம்பிபிஎஸ் டவுண்லோட் வேகம் மற்றும் 50எம்பிபிஎஸ் (Mbps) வரை அப்லோட் வேகம் வழங்கும்.

க்ளவுட்

க்ளவுட்

மேலும், கூடுதலாக நோக்கியா பிராண்ட் சாதனங்களானது கூகுளின் சில ஆதரவுகளை பெறுகிறது அதாவது கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் கூகுள் போட்டோஸ்-ல் வரம்பற்ற க்லவுட் சேமிப்பு ஆதரவு கிடைக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அசத்தும் அம்சங்களுடன் ஆல் நியூ நோக்கியா 3310, என்ன விலை.?

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 3 is one of the best quality phones you can buy under 10,000 rupees. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X