நோக்கியா 3,5,6 ஸ்மார்ட்போன்களின் இந்திய விலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.!

Written By:

எச்எம்டி க்ளோபல் இறுதியாக இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா-பிராண்ட் ஸ்மார்ட்போன்களான - நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ரூ.14,999/- என்ற விலைக்கு கிடைக்கும் மற்றும் இது அமேசான் வலைத்தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கும். நோக்கியா 5 ஆனது ரூ.12,899/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது மற்றும் இது ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும். மேலும், நோக்கியா 3 ஆனது ரூ.9,499/-க்கு கிடைக்கும்.

பிப்ரவரியில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிமுகமான நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 3310 ஆகிய கருவிகளில் கடந்த மாதம் நோக்கியா 3310 மட்டுமே ரூ.3,310/-க்கு இந்தியாவில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனைகள் ஆரம்ப கட்டத்தில் ஆஃப் -லைன் சந்தையில் விற்கப்படும், பின்னர் ஆன்லைன் ஸ்டோரிலிலும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

இந்த அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6

நோக்கியா 6

நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

நோக்கியா 5

நோக்கியா 5

நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

நோக்கியா 3

நோக்கியா 3

நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எமி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

வலுவான அச்சுறுத்தல்

வலுவான அச்சுறுத்தல்

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சாம்சங், சியோமி, லெனோவா-மோட்டோ மற்றும் எச்டிசி ஆகிய இடைப்பட்ட வரம்பு விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு வலுவான அச்சுறுத்தலாக இருக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Nokia 3,5,6 India prices confirmed. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot