ஜூன் 13-ஆம் தேதி இந்தியாவில் நோக்கியா 3,5 மற்றும் 6.!

Written By:

நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய கருவிகள் உலக சந்தையில் விற்பனைக்கு தாயாராகி வருகின்ற நிலையில் எச்எம்டி குளோபல் அதன் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் பெறும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதலில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் அதற்கு பின்னர் வெளியான தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறியது.

ஜூன் 13-ஆம் தேதி இந்தியாவில் நோக்கியா 3,5 மற்றும் 6.!

தற்போது ஜூன் 13-ஆம் தேதி அன்று நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு நுழையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றுகூறப்பட்டிருந்தது. அது சார்ந்த தெளிவான விளக்கங்கள் இல்லை.

அபப்டியாக நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எமி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

Read more about:
English summary
Nokia 3, 5, 6 India Launch Expected on June 13. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot