6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடல்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸமார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 460பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் + 5எம்பி சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு, நீலம், வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications