கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: டிசம்பருக்குள் களமிறங்கும் நோக்கியா 3.4: சிறந்த அம்சங்கள் பட்ஜெட் விலை!
நோக்கியா 3.4 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடுதல் சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

நோக்கியா 2.4 பட்ஜெட் ஸ்மார்ட்போன்
நோக்கியா 2.4 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நோக்கியா 3.4 விரைவில்
நோக்கியா ஸ்மார்ட்போனின் 2020 அறிமுகம் இன்னும் முடியவடையவில்லை, நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம்
நோக்கியா பவர் யூஸரின் அறிக்கையின்படி, எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் 3.4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல சேமிப்பு வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும் ஆரம்பவிலை ரூ.12,000 ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இடைநிலை மாடலாக இருக்கும் என எதிர்பார்ப்பு
நோக்கியா 3.4 இந்தாண்டு தொடக்கத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனுக்கும் ப்ரீமியம் விலை நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனுக்கும் இடைநிலை மாடலாக பார்க்கப்படுகிறது.

6.3 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
புது மாடல் டிஸ்ப்ளேயில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பு இருக்கிறது. 6.3 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் முன்புற கேமராவிற்கு பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் வருகிறது. 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி 4ஜபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது.

13 மெகாபிக்சல் பிரதான கேமரா
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமைக்கு தயாரான முறையில் இது இருப்பதாக கூறப்படுகிறது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா 5 மெகாபிக்சல் அல்ட்ராய வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இதில் 10 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
file images


Click it and Unblock the Notifications