Just In
- 4 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 5 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 6 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 7 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலிவு விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
நோக்கியா நிறுவனம் இன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலை செக்மென்ட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் நிறுவனம் புதிய நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் சாதனத்தையும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்
இந்த பதிவில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம். நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது? இதன் ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது? எப்போது முன்பதிவு செய்யக் கிடைக்கிறது? ஆரம்பக்கால சலுகைகள் என்ன என்பது போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மலிவு விலை நோக்கியா போன்
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் கொண்ட ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மலிவு விலையில் ரூ.11,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா வலைத்தளம் வழியாகப் பிப்ரவரி 10ம் தேதி முதல் முன்பதிவிற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை உண்டு
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Nokia Power Earbuds Lite வெறும் ரூ.1600 விலையில் கிடைக்கிறது. இத்துடன் ஜியோவில் இருந்து ரூ. 4,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். ரூ .349 திட்டத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது ரூ. 2,000 உடனடி கேஷ்பேக் மற்றும் ஜியோவின் கூட்டாளர்களிடமிருந்து ரூ. 2,000 மதிப்புள்ள வவுச்சர்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சலுகை அனைத்து ஜியோ சந்தாதாரர்களுக்கு பொருந்தும்.

நோக்கியா 5.4 சிறப்பம்சம்
- 6.39' இன்ச் 720 x 1560 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட்
- 4 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டு
- அண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 தயாராக உள்ளது
- ட்ரிபிள்-கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்

- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- பின்புற கைரேகை சென்சார்
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 10W சார்ஜிங்
- 4,000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம் : எப்-ஜார்டு, டஸ்க் மற்றும் சார்கோல் பிளாக்
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999