Home
Mobile

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: புதிய அப்டேட்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் உடன் மார்ச் security patch நன்மையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த 2019-ம் ஆண்டு துவகத்தில் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் அறிவிப்பை அதிகாரப்பூர்வ நோக்கியா தளத்தில் ஒரு அதிகாரி அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் இந்தியா உட்பட 34 நாடுகளில் உள்ள நோக்கியா 3.2 பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

 720x1520 பிக்சல்

720x1520 பிக்சல்

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்தது, ஆனால் தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

 13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Nokia 3.2 Received Android 11 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X