இந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
இந்திய சந்தையில் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு விலையை குறைத்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதன்படி 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 10,790-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications