நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதன் ஸ்மாரட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் சில ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்பு
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,790-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 4.2 டிஸ்பிளே:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

நோக்கியா 4.2 கேமரா:
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications