நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 4ஜி சாதனங்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது.

|

இந்தியாவில் நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 4ஜி
சாதனம் பொறுத்தவரை வரும் அக்டோபர் 24-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 4ஜி சாதனங்கள் அறிமுகம்.!

அதேபோன்று நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் 19-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 3.1 பிளஸ் சாதனத்திற்கு ஏர்டெல் சார்பாக சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 3.1 பிளஸ்:

நோக்கியா 3.1 பிளஸ்:

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 2.5டி கிளாஷ் மற்றும் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இக்கருவி.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது, குறிப்பாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி
இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மேலும் 2ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. அதேபோன்று 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000-ஆக உள்ளது.

நோக்கியா 8110:

நோக்கியா 8110:

நோக்கியா 8110 4ஜி சாதனம் 2.45-இன்ச ஞஏபுயு கலர் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 டூயல்-கோர் செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி இடமபெற்றுள்ளது.

நோக்கியா 8110 விலை:

நோக்கியா 8110 விலை:

நோக்கியா 8110 4ஜி சாதனத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப், கூகுள் மேப், டிவிட்டர் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும். பின்பு 2எம்பி ரியர் கேமரா மற்றும் 1500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 3.1 Plus, Nokia 8110 4G launched: Price in India, features and specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X