சத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.!
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்ப ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் சத்தமில்லமால் இந்திய சந்தையில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிதம் சிறப்பு தள்ளுபடிவழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனைப்
பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த
பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்ப ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக பின்புற கேமராவில் தெளிவான படங்களை எடுக்கும் சென்சார் அமைப்பு உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிஇ 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 2990எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.10,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications